Dec 13, 2025
Thisaigal NewsYouTube
செமினி தோட்டப் பாட்டாளிகளுக்குச் சொந்த வீடுகள் கிடைத்தன
சிறப்பு செய்திகள்

செமினி தோட்டப் பாட்டாளிகளுக்குச் சொந்த வீடுகள் கிடைத்தன

Share:

செமினி, டிசம்பர்.13-

21 ஆண்டுக் காலப் போராட்டத்திற்குப் பின் சிலாங்கூர், செமினி தோட்ட மக்களுக்குச் சொந்த வீடுகள் கிடைத்துள்ளன. பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 21ஆண்டுகளுக்கு முன் செமினி தோட்ட மக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் தோட்ட வீடுகளைக் காலி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.

இதில் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்கள் வீடுகளைக் காலி செய்து வெளியேறினர். அதே வேளையில் 17 குடும்பங்கள் சைம் டார்பி நிறுவனம் சொந்த வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என இறுதி வரை போராடின. அதன் அடிப்படையில் 17 குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் இலவசமாக வீடுகளைக் கட்டித் தந்துள்ளதாக அருட்செல்வன் தெரிவித்தார்.

மேலும் தோட்டத்தை விட்டு வெளியேறிய 17 குடும்பங்களுக்கு 42,000 ரிங்கிட் விலையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டன.

பல இடர்களுக்கு பின் அந்த வீடுகள் அனைத்தும் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டன. இன்று அந்த வீடுகளின் சாவி 34 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாக அருட்செல்வன் குறிப்பிட்டார்.

Related News