Jun 25, 2026
Thisaigal NewsYouTube
ஊழலற்ற சமுதாயமே இலக்கு: மஇகா தொகுதித் தலைவர்களுக்கு எஸ்பிஆர்எம் மூத்த அதிகாரிகள் விளக்கம்
சிறப்பு செய்திகள்

ஊழலற்ற சமுதாயமே இலக்கு: மஇகா தொகுதித் தலைவர்களுக்கு எஸ்பிஆர்எம் மூத்த அதிகாரிகள் விளக்கம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.14-

ஓர் அரசியல் கட்சி மற்றும் அரசியல்வாதிகள் என்ற முறையில் நிதி வளங்களை கையாளுவதில் நேர்மையும், நம்பகத்தன்மையை கடைப்பிடித்து அவற்றை எவ்வாறு கையாளுவது என்பதை விளக்கும் வகையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம்முடன் இணைந்து மஇகா ஊழல் தடுப்பு மீதான விழிப்புணர்வு கருத்தரங்கை இன்று ஏற்பாடு செய்தது.

மஇகா தலைமையகத்தில் Hala Tuju SPRM என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மஇகா தொகுதி தலைவர்கள் பெருவாரியாக கலந்து கொண்ட இந்த கருத்தரங்கை எஸ்பிஆர்எம் தலைமையகம் சார்பில் அதன் சமூகவியல் கல்விப் பிரிவின் மூத்த உதவி கண்காணிப்பாளர்களான Senior Assistant Superintenden கேசவன் இராதகிருஷ்ணன் மற்றும் சேகர் மாரியப்பன் கலந்து கொண்டு எஸ்பிஆர்எம் நோக்கங்கள் மற்றும் அதன் பங்களிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.

கேசவன் தமது உரையில் , "SPRM-இன் முதன்மை நோக்கம் என்பது வெறும் தண்டனை வழங்குவது மட்டுமல்ல, ஊழலற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும். குறிப்பாக, அரசியல் மற்றும் பொது நிர்வாகத் தளங்களில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் உறுதிப்படுத்துவதில் எங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஒவ்வொரு தலைவரும் பொறுப்புணர்வுடன் செயல்படும் போது, அது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், ஊழல் மலிவு குறியீட்டில் மலேசியா முன்னேறுவதற்கும் வழிவகுக்கும்," என்று விளக்கமளித்தார்.

பின்னர் திசைகளுக்கு அளித்த பேட்டியில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் முன்னெடுப்பில் மஇகாவுடன் இணைந்த இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டதாக கேசவன் குறிப்பிட்டார்.

"SPRM-இன் பங்களிப்பு குறித்து மஇகா தலைவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் ஐயப்பாடுகளுக்கும், மூத்த உதவி கண்காணிப்பாளர் கேசவன் மிகுந்த தெளிவோடும் நிதானத்தோடும் விளக்கமளித்தது அனைவரது கவனிப்பையும் ஈர்த்தது.

கேசவனுடன் இணைந்து எஸ்பிஆர்எம் மூத்த உதவி கண்காணிப்பாளர் சேகர் மாரியப்பனும் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதி வளங்களில் கையாளுவதில் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!