கோலாலம்பூர், நவம்பர்.24-
இளம் எழுத்தாளரான கிரிஷ் ஹரன் நாயருக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டுள்ளது. நேற்று கோலாலம்பூர், ஸ்டெடியம் மெர்டேக்கா அரங்கில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சிறுவர்கள் தினத்தையொட்டி கிரிஷ் ஹரன் நாயருக்கு இந்தச் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நொராய்னியுடன் இணைந்து பிரதமரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், இந்தச் சிறப்பு விருதை கிரிஷ் ஹரனுக்கு வழங்கினார்.
எழுத்துத்துறையில் சமூக நல பங்களிப்புக்காக அவருக்கு இந்தச் சிறப்பு விருது, மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
The Mysterious War To The Deep எனும் நூலை எழுதியது மூலம் மக்களின் கவன ஈர்ப்பைப் பெற்ற கிரிஷ் ஹரன், அந்த நூல் விற்பனையின் மூலம் 7 ஆயிரம் ரிங்கிட்டைத் திரட்டி, அந்த மொத்த தொகையையும் ஜோகூர், யயாசான் சுல்தான் இப்ராஹிம் அறவாரியத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
அவரின் இந்தப் பங்களிப்பு மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.








