Oct 26, 2026
Thisaigal NewsYouTube

ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

ஈப்போ லிட்டில் இந்தியாவில் இவ்வாண்டுக்கான தீபாவளிச் சந்தை களைகட்டியுள்ளது. இந்திய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில், அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கிய இச்சந்தை, நவம்பர் 7ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இச்சந்தையில் சுமார் 86 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஈப்போ லிட்டில் இந்திய வர்த்தக சங்கத் தலைவர் ஜீவா கிருஷ்ணன் தெரிவித்தார். வழக்கமான வர்த்தகர்களும் பங்கேற்று வியாபாரம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வாகன நிறுத்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், வர்த்தக சங்கத்தின் பின்புறத்தில் ஒரே நேரத்தில் 200 முதல் 300 கார்கள் வரை நிறுத்தக்கூடிய தனியார் வாகன நிறுத்துமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் மூலம் புதிய பொதுக் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் தீபாவளிச் சந்தைக்கு வருகை தந்து, அங்குள்ள வர்த்தகர்களுக்கு ஆதரவு அளிப்பதுடன், தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறும் ஜீவா கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

கோத்தா கெமுனிங்கில் 6 இந்திய சிறு வியாபாரிகளுக்கு  வணிகச் சாதனங்கள் – 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உதவி

கோத்தா கெமுனிங்கில் 6 இந்திய சிறு வியாபாரிகளுக்கு வணிகச் சாதனங்கள் – 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உதவி

மலேசிய இந்தியர்களின் வலிகளையும் பங்களிப்புகளையும் ஆவணப்படுத்தும் 500 பக்க நூல் வெளியீடு

மலேசிய இந்தியர்களின் வலிகளையும் பங்களிப்புகளையும் ஆவணப்படுத்தும் 500 பக்க நூல் வெளியீடு

திருக்குறளை நவீன தொழில்நுட்பத்துடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் – டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு

திருக்குறளை நவீன தொழில்நுட்பத்துடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் – டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு

இனமானம், மொழிமானம், தன்மானம் இல்லாத மனிதன் சுயமானம் இழந்தவனாகிறான்!

இனமானம், மொழிமானம், தன்மானம் இல்லாத மனிதன் சுயமானம் இழந்தவனாகிறான்!