கிள்ளான், அக்டோபர்.13-
வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த 35 குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புலிங்கம், கிள்ளான் லிட்டல் இந்தியாவில் உள்ள பிரபல ஜவுளிக் கடை ஒன்றிலிருந்து புத்தாடைகளை வாங்கி, அச்சிறார்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

தீபாவளித் திருநாளை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்கும் அதே வேளையில் நம்மைப் போல் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த சிறார்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கும் புத்தாடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக பிரகாஷ் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி சிறார்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஷா ஆலாம் நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பாக பணமுடிப்பையும் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வழங்கினார்.