Oct 19, 2025
Thisaigal NewsYouTube
நான்கு மாநிலங்களில் ஓப் துவா
சிறப்பு செய்திகள்

நான்கு மாநிலங்களில் ஓப் துவா

Share:

மலாக்கா, ஜூலை.21-

நாட்டின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக தேசிய வருவாய் வசூல் எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதிச் செய்வதில் மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியம் கடப்பாடு கொண்டுள்ளது. மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா மற்றும் பெர்லிஸில் இன்று முதல் 25 ஆம் தேதி வரை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் "ஓப் துவா" எனப்படும் தேசிய அளவிலான வரி பின்பற்றல் நடவடிக்கைகளின் தொடரை ஹாசில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஓப் துவா செயல்படுத்தல் ஆறு முக்கிய வரி செயல்பாட்டு நடவடிக்கைகளை உள்ளடக்கி முழுமையானத் திட்டமிடப்பட்டுள்ளது. தணிக்கை, வசூல், வரி செலுத்துவோர் சரிபார்ப்பு, கேந்திர இணக்கம், சட்டம் மற்றும் மினி ஜெலாஜா மின்-இன்வாய்ஸ் ஆகியவை அவை.

இந்த ஐந்து நாள் செயல்பாட்டை செயல்படுத்துவதற்கான கவனம் குத்தகையாளர்கள், மேம்பாட்டாளர்கள், போக்குவரத்து, விளம்பரம், மொத்த விற்பனையாளர்கள், கட்டுமானம், பொறியியல், ரியல் எஸ்டேட், போக்குவரத்து, விவசாயம், கிளினிக்குகள், மின்-கழிவுகள், மின்னணு சிகரெட்டுகள் (வேப்) மற்றும் தொழில்முறை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை நான்கு மாநிலங்களில் 346 ஹாசில் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்படுகிறது. அமலாக்க நடவடிக்கைக்கு 1,829 சம்பவங்கள் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வரி முறையை இலக்கவியல்மயமாக்கும் முயற்சிகளுக்கு இணங்க, ஓப் துவா மினி ஜெலாஜா மின்-இன்வாய்ஸை செயல்படுத்துவதன் மூலம் வரி செலுத்துவோருக்கு நேரடி தகவல்களை வழங்க முடிகிறது.

புதிய இலக்கவியல் அமைப்பிற்கான வரி செலுத்துவோரின் புரிதலையும் தயார்நிலையையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், மிகவும் திறமையான, வெளிப்படையான மற்றும் பதிலளிக்கக்கூடிய வரி விதிப்பு சூழலை நோக்கி ஒரு முறையான மாற்றத்தையும் இது ஆதரிக்கிறது.

நிர்வாக துணைத் தலைமை அதிகாரி டத்தோ ஹிஷாம் ருஸ்லி திறப்பு விழாவை மலாக்கா ஹாசில் கோபுரத்தில் அந்நடவடிக்கையைத் தொடக்கி வைத்தார். மேலும் பல முக்கியப் பிரமுகர்களும் அதில் பங்கேற்றனர்.

Related News

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு