கோலாலம்பூர், அக்டோபர்.10-
மக்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் பொருட்டு காப்புறுதி அல்லது தக்காஃபுல் காப்புறுதித் திட்டங்களைக் கொண்டுள்ள மக்களுக்கு மூவாயிரம் ரிங்கிட் வரை வருமான வரி விலக்களிப்பு வழங்கப்படவிருக்கிறது.
இது காப்புறுதி பாலிசிதாருக்கு மட்டுமல்லாமல் கணவர் அல்லது மனைவி மற்றும் பிள்கைளுக்கும் சேர்த்து எடுக்கப்படும் காப்புறுதியின் மொத்த பிரமியத் தொகைக்கு வருமான வரி விலக்களிப்பு வழங்கப்படும் என்று நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் அறிவித்தார்.








