ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.25-
மலேசியாவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுச் செலவுத் திட்டத்தில் அரசாங்கம் இந்திய இளைஞர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு மாநில கெஅடிலான் கட்சியின் இளைஞர் மன்றத் தலைவர் ஜக்குவான் பின் முஸ்தாப்பா தெரிவித்தார்.
மூவினம் எனும் கோட்பாட்டில் இந்திய சமுதாயத்திலுள்ள இளைஞர்களுக்கு முக்கியவத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார். இந்நாட்டில் கல்வித் தகுதி உள்ளவர்களும் கல்வித் தகுதி இல்லாத பல இந்திய இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்குப் பல போராட்டங்களைக் கையாண்டு வருவது உணர முடிகின்றது .
அந்த வகையில் மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டு வரைப்படும் 2026 ஆம் ஆண்டின் வரவுச் செலவுத் திட்டத்தில் இந்திய இளைஞர்கள் கைத்தொழிலை வளர்ப்பத்தற்கான திறன் பயிற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்காக கூடுதலான வேலை வாய்ப்புகளும் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஜக்குவான் தெரிவித்தார் .
அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் இருந்தால் அவர்கள் சீர்கேடான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். பிறகு, இந்திய இளைஞர்களைத் தொழில்முனைவர்களாக உருவாகுவதற்கு அரசாங்கம் அவர்களுக்கு என்று ஒரு தனி மானியத்தை ஒதுக்கப்பட வேண்டும் என்று ஜக்குவான் கேட்டுக் கொண்டார்.
ஆகவே , டிஜிட்டல் , பசுமை தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலத் தொழில் துறைகளில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பை உறுதிச் செய்ய வேண்டும். எனவே, இந்திய இளைஞர்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் ஒற்றுமைக்கும் பங்களிக்கும் என்று பினாங்கு மாநில கெஅடிலான் கட்சியின் இளைஞர் மன்றத்தின் தலைவர் ஜக்குவான் பின் முஸ்தாப்பா குறிப்பிட்டார்.