கோலாலம்பூர், அக்டோபர்.10-
வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு டோல் கட்டணம் 50 விழக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி வெளியூர்களுக்குச் செல்லும் மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் பொருட்டு இரண்டு தினங்களுக்கு டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.








