கோலாலம்பூர், அக்டோபர்.07-
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் அக்டோபர் 26-ஆம் தேதி வரை பெவிலியன் கோலாலம்பூர், பெவிலியன் புக்கிட் ஜாலில் மற்றும் இண்டர்மார்க் மால் ஆகிய வணிக வளாகங்களில் சிறப்பான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“Diya Deepavali”, “Rangoli Deepavali” மற்றும் “Radiance of Heritage” என்ற கருப்பொருளுடன் இந்திய பாரம்பரியம், நவீன கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவு விழாக்கள் இணைந்த சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இக்கொண்டாடங்களில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும், பொருட்கள் வாங்குவதற்கான கூப்பன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
மலேசிய சுற்றுலாத் துறையின் பொது நிர்வாக இயக்குநர் டத்தோ மனோகரன் பெரியசாமி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த இந்நிகழ்வில், பெவிலியன் கேஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு உறுப்பினரான பல்ஜீட் கவுர் கிரேவால் மற்றும் Maybank CFS குழுமத்தின் Cards பிரிவு தலைவர் பி. ரவிந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பண்பாட்டு அடையாங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகள் ஏற்றி துவங்கப்பட்ட இவ்விழாவில், இந்தியாவின் புகழ்பெற்ற அன்ஹாத் ஸ்டுடியோ கலைஞர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் அவர்கள் முதன்முறையாக மேடை ஏறியிருந்தது குறிப்பிடத்தக்கது.








