ஷா ஆலாம், செப்டம்பர்.12-
மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில் தந்தை பெரியாரின் 147 ஆவது அகவை நன்நாள் விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 19 இல் உள்ள டேவான் செக்ஷன் 19 பொது மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
இயக்கத்தின் துணைத் தலைவர் த. பரமசிவம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் முன்னாள் துணை அமைச்சர் டான் ஶ்ரீ க. குமரன், தொடக்கவுரை நிகழ்த்தி, விருதளிப்பு நிகழ்வுக்கு தலைமையேற்பார்.
மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தலைவர் எழுத்தாண்மை ஏந்தல் பெரு. அ. தமிழ்மணி, தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து, பேருரை நிகழ்த்துவார்.
இந்நிகழ்வில் த.பரமசிவம் மற்றும் கொள்கைக் கனல் கெ.வாசு ஆகியோர் தன்மானப் பெருஞ்சுடர் எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்படவிருக்கின்றனர்.
மதிக தேசியத் தலைவர் சா. பாரதி, மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக. பஞ்சு ஆகியோர் சிறப்புரை வழங்குவர்.
பிரபல பாடகர் எம்.எஸ். பிரிட்டோவின் படைப்பையும் கண்டு களிக்க, இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளும்படி இயக்கப் பொதுச் செயலாளர் சி.மு. விந்தை குமரன் கேட்டுக் கொள்கிறார்.