பிரிக்பீல்ட்ஸ், ஆகஸ்ட்.07-
எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், ஸ்காட் ரோட் பிரிக்பீல்ட்ஸில் உள்ள கந்தசாமி ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கலா மண்டபத்தில் முதன் முறையாக ஆன்மீக புத்தகக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது.
மலேசிய ஸ்ரீ ரமண மகரிஷி மையம் மற்றும் சில அமைப்புகளின் சார்பாக மிகச் சிறப்பான முறையில் இந்த ஆன்மீக புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நமது இந்திய சமுதாயத்தினர் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை மீட்டு எடுப்பதற்காகவும், இளைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் இந்த ஆன்மீக புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியில் ஆன்மீக மற்றும் சமயம் சார்ந்த புத்தகங்களை மக்கள் பெற்று பயன் பெறலாம்.
இக்கண்காட்சிக்கு மக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து, பயன் பெற வேண்டுமாய் ஏற்பாட்டுக் குழுவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
நிகழ்ச்சி தொடர்பாக மேல் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தேவேந்திரன் 012-2294936
மணி 012-3073565
கிரு 019-2132147