கோலாலம்பூர், நவம்பர்.10-
இந்தியர்களின் சமூகவியல் உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு டத்தோ ஶ்ரீ ரமணன் 2023 ஆம் ஆண்டு தலைமையேற்றப் பின்னர் அப்பிரிவின் வாயிலாக சமூகத்திற்கு மிகப் பெரிய உருமாற்றுத் திட்டங்களைக் கொண்டு வந்த பெருமை அவரையே சாரும் என்கிறார் டத்தோ அன்புமணி பாலன்.
கல்வித் திட்டங்களுக்கு அதீத கவனம் செலுத்தினார். இந்திய இளைஞர்கள் குறிப்பாக படிப்பை முடித்த B40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு தொழில்திறனைக் கற்றிருக்க வேண்டும். எதிர்காலத்தில் நல்லதொரு வருவாயைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அவர்களை திவெட் தொழிற்பயற்சித் திட்டங்களில் ஈடுபட வைத்தார்.
மித்ரா மூலம் ஏற்படுத்தப்பட்ட இந்த திவெட் பயிற்சித் திட்டங்களில் Drone பயிற்சித் திட்டம் முதன்மையானதாகும். Drone பயிற்சி அடிப்படைப் பயிற்சி முதல் நிபுணத்துவப் பயிற்சி வரை நமது இளைஞர்கள் கற்றுக் கொள்வதற்கு இத்திட்டம் வகை செய்தது
பயிற்சி மட்டுமின்றி அவர்களுக்கு வேலை கிடைப்பற்தான உத்தரவாதத்தையும் டத்தோ ஶ்ரீ ரமணன் ஏற்படுத்தினார் என்பதுதான் இத்திட்டத்தின் சிறப்பாகும் என்று டத்தோ ஶ்ரீ ரமணனின் அந்தரங்கச் செயலாளரான டத்தோ அன்புமணி விவரித்தார்.
டத்தோ ஶ்ரீ ரமணன் மித்ராவின் தலைவராக இருந்த போது, கிட்டத்தட்ட 300 திட்டங்களைக் கொண்டு வந்தார். அந்த திட்டங்களின் ஒதுக்கப்படும் நிதியானது, வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் உரிய இலக்கை சென்றடைய வேண்டும் என்பதற்காக அவற்றைக் கண்காணிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உறுப்பினர்களை டத்தோ ஶ்ரீ ரமணன் நியமித்தார்.
மித்ராவின் எந்தவொரு நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்திலும் வெளிப்படைத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதற்காக எஸ்பிஆர்எம் அதிகாரிகளை நியமித்த முதலாவது தலைவர் என்றால் என்றால் அவர் டத்தோ ஶ்ரீ ரமணனாக மட்டுமே இருக்க முடியும்.
நிதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் கையாளப்பட்ட அணுகுமுறையைக் கண்டு டத்தோ ஶ்ரீ ரமணனுக்கு எஸ்பிஆர்எம் ஆணையமே பாராட்டுப் பத்திரம் வழங்கி சிறப்புச் செய்தது. அந்த அளவிற்கு சமுதாயத்தின் இலக்குக்கு உயரிய அமைப்பாக மித்ராவை டத்தோ ஶ்ரீ ரமணன் மேம்படுத்தினார் என்று டத்தோ அன்புமணி புகழாரம் சூட்டினார்.








