ஷா ஆலாம், அக்டோபர்.11-
ஆயாம் மாஸ் காபிரேசன் நிறுவனத்தின் சார்பாக 50 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பாக உணவுப் பொருட்களை அந்நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ ஜீவேந்திரன் ராமநாயுடு அவர்களின் ஆதரவில் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு சிறப்பு வருகையாளராக வருகை அளித்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ச. பிரகாஷ் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குனருமாகிய டத்தோ ஜீவேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு அன்பளிப்புப் பொருட்களை எடுத்து வழங்கினார்.

ஆயாமாஸ் நிறுவனத்தினர் உணவு பொருட்கள் மட்டும் இன்றி, உடனடியாக சமைக்கும் துரிதக் கோழி வகை உணவுகளும்,முழு கோழியை வழங்கும் நிறுவனத்தின் சார்பாக கூடுதலாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியை சிறப்புறச் செய்தது மட்டும் இல்லாமல் நலிந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பொருட்களை வழங்க முன்வந்த டத்தோ ஜீவேந்திரன் அவர்களுக்கு இவ்வேளையில் கோத்தா கெமுனிங் மக்கள் சார்ப்பாக நன்றியினை ச.பிரகாஷ் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.