கோலாலம்பூர், அக்டோபர்.11-
சூரியா கே.எல்.சி.சி குழுமம், இவ்வாண்டின் தீபாவளிப் பண்டிகையை ஒளியின் சிறப்புடன் வண்ணமயமாக மாற்றியுள்ளது.
“லோட்டஸ் ஒஃப் லைட்” எனும் கருப்பொருளின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி முதல் வரும் 22-ஆம் தேதி வரை, சூரியா கே.எல்.சி.சி, அலமாண்டா ஷாப்பிங் செண்டர், மற்றும் மெஸ்ரா மால் ஆகிய இடங்களில் தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன.
தூய்மை, புத்துணர்ச்சி மற்றும் மறுபிறப்பின் சின்னமாக விளங்கும் தாமரை மலரின் கருப்பொருளை மையமாகக் கொண்டு இப்பண்டிகை அலங்காரம் உருவாக்கப்பட்டுள்ளது.
தாமரை மலர் மக்களை ஒன்றிணைக்கும் ஒளி மற்றும் நம்பிக்கையின் அடையாளம் என்று சூரியா கே.எல்.சி.சி தலைமை நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் டான் கூறியுள்ளார்.
அதே வேளையில், சூரியா கே.எல்.சி.சியின் சென்டர் கோர்ட்டில் தாமரை மலரைப் பிரதிபலிக்கும் பிரமாண்ட ஒளி அலங்காரம், பாரம்பரிய கோலம் வடிவங்கள், மற்றும் பாரம்பரிய பாரதநாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி தினத்தில் ஹென்னா பயிற்சி வகுப்பும் நடத்தப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் 1,000 ரிங்கிட் செலவில் 50 ரிங்கிட் ஷாப்பிங் இ-வவுச்சர் அல்லது 1,000 ரிங்கிட் மதிப்பில் இ-வவுச்சர் வாங்கினால் கூடுதலாக 100 ரிங்கிட் இ-வவுச்சர் பெறலாம்.
புத்ராஜெயாவிலுள்ள அலம்மண்டா ஷாப்பிங் செண்டரும் மற்றும் திரங்கானுவில் உள்ள மெஸ்ரா மாலும் இதே கருப்பொருளில் தங்கள் விழாக்களைக் கொண்டாடுகின்றன. இந்த ஒருங்கிணைந்த விழா, மலேசியாவின் பண்பாட்டையும், ஒற்றுமையின் உணர்வையும் பிரதிபலிக்கிறது.