Oct 28, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி திருநாளை முன்னிட்டு யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் அறவாரியம் மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி திருநாளை முன்னிட்டு யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் அறவாரியம் மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி

தீபாவளி திருநாளை முன்னிட்டு யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் (Yayasan Kebajikan Artis Tanahair) அறவாரியம், உள்ளூரைச் சேர்ந்த 15 மூத்த கலைஞர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கியது. இந்த நிகழ்வு இன்று கோலாலம்பூர், WP ஹோட்டலில் அறவாரியத்தின் தலைவர் டத்தோ டிஜே டேவ் தலைமையில் அறவாரியத்தின் காப்பாளர்களான டத்தோ நான்சி ஃபூ, டத்தோ நேஷ் மற்றும் டாக்டர் எஸ். கனகராஜா முன்னிலையில் நடைபெற்றது. நிதி உதவிப் பெற்ற 60 வயதைக் கடந்த மூத்த கலைஞர்களில் எட்டு பேர் இந்தியர்கள், ஐவர் மலாய்க்காரர்கள், இருவர் சீனர்கள் ஆவர்.

இசை அரசன் இசைக்குழுவின் கித்தார் இசைக்கலைஞர் 74 வயது வெள்ளக்கிருஷ்ணன் முனுசாமி, வானவில் இசைக்குழுவின் பாடகி 73 வயது கிருஷ்ணவேணி ரத்னம், கலைமணி இசைக்குழுவின் 66 வயது பாடகர் அலவியன் ராமசாமி, நாடக நடிகர் 65 வயது குசியொன் லால் சுக் செயின், மூவி ஐ லவ் 70 புகழ் நடிகர் 63 வயது மகேஸ்வரன் மாணிக்கம், லோக் ஆப் இசைக்குழுவின் பாடகர் 61 வயது அருமைநாதன் முனியாண்டி, ஸ்ரீ ரஞ்சனி இசைக்குழுவின் பாடகர் 61 வயது பாலசுப்பிரமணியம் முனியாண்டி, சுங்கை பட்டாணி அலையோசை இசைக்குழுவின் பாடகர் 60 வயது ரகுநாதன் ராமநாதன் ஆகியோரே ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி பெற்ற எட்டு இந்தியர்கள் ஆவர்.

நாட்டின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தேசிய அடையாளத்தின் வளர்ச்சிக்குத் தங்களின் வாழ்நாள் பங்களிப்பை வழங்கிய மூத்த கலைஞர்களை இனம், மதம் பாராமல் கௌரவிப்பதே இந்த நிதியுதவியின் முதன்மை நோக்கமாகும் என்று நிகழ்விற்கு தலைமையேற்ற யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் அறவாரியத்தின் தலைவர் டத்தோ டிஜே டேவ் தெரிவித்தார்.

குறிப்பாக, 60 வயதைக் கடந்த கலைஞர்கள் பண்டிகைக் காலத்தில் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிதிச் சுமைகளைக் குறைத்து, அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதை உறுதி செய்ய இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று டத்தோ டிஜே டேவ் விவரித்தார்.

தொடர்ந்து திசைகளிடம் பேசிய அறவாரியத்தின் காப்பாளரும், தமிழ் பிரிவின் பொறுப்பாளருமான டாக்டர் எஸ். கனகராஜா, இன்றைய தினம் தீபாவளி திருநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதியுதவிகளில் சுமார் 8 முதல் 9 பேர் தமிழ்க் கலைஞர்கள் என்றும், இவர்கள் கெடா, ஈப்போ போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து நிதியைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இந்த உதவித் தொகை தீபாவளிக்கு மட்டுமின்றி, அடுத்து வரும் கிறிஸ்துமஸ், சீனப் புத்தாண்டு, ஹரிராயா என அனைத்துப் பண்டிகைகளுக்கும் அந்தந்த சமூகக் கலைஞர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்

மலேசியக் கலைத்துறையின் தூண்களாக விளங்கிய மூத்த கலைஞர்களின் நலனைக் காப்பதில் யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் அமைப்பு ஆற்றி வரும் இந்தச் சேவை மிகவும் பாராட்டுக்குரியதாகும். நலிவடைந்த நிலையில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், இந்த உன்னதச் சேவை எவ்விதத் தொய்வுமின்றித் தொடரவும் அரசாங்கமும் நாட்டின் முன்னணி பெருநிறுவனங்களும் தாராளமாக நிதி வழங்கி தங்களது மேலான ஆதரவை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
பிறை சட்டமன்றத் தொகுதியில் 1,200 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்

பிறை சட்டமன்றத் தொகுதியில் 1,200 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்

கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

கோத்தா கெமுனிங்கில் 6 இந்திய சிறு வியாபாரிகளுக்கு  வணிகச் சாதனங்கள் – 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உதவி

கோத்தா கெமுனிங்கில் 6 இந்திய சிறு வியாபாரிகளுக்கு வணிகச் சாதனங்கள் – 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உதவி

மலேசிய இந்தியர்களின் வலிகளையும் பங்களிப்புகளையும் ஆவணப்படுத்தும் 500 பக்க நூல் வெளியீடு

மலேசிய இந்தியர்களின் வலிகளையும் பங்களிப்புகளையும் ஆவணப்படுத்தும் 500 பக்க நூல் வெளியீடு