Oct 28, 2026
Thisaigal NewsYouTube

பிறை சட்டமன்றத் தொகுதியில் 1,200 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிறை சட்டமன்றத் தொகுதியில் 1,200 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, பிறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1,200 பயனாளிகளுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்.

பிறை சாய் லெங் பார்க் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, பிறை சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி இவ்வாண்டு மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, கடந்த ஆண்டு 1,000 பேருக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள், இவ்வாண்டு 1,200 பேருக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்பதிவு செய்து தகுதி பெற்ற ஒவ்வொரு பயனாளிக்கும் சுமார் 120 ரிங்கிட் மதிப்பிலான அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

“இந்த உதவி பெரிய அளவிலானதாக இல்லாவிட்டாலும், இதைப் பெற்றுக் கொண்ட மக்களின் முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியும் புன்னகையும் எனது மனதை நெகிழச் செய்தன. தீபாவளிக் காலத்தில் குடும்பங்களின் செலவுச் சுமையைக் குறைக்க இந்த உதவி ஓரளவு துணையாக இருக்கும். இதற்காகப் பலரும் தங்களது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்,” என்று டத்தோ ஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

மேலும், பிறை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இனம், மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவது தனது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சமூகநல முயற்சிகள் அன்பு, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
தீபாவளி திருநாளை முன்னிட்டு யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் அறவாரியம் மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி

தீபாவளி திருநாளை முன்னிட்டு யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் அறவாரியம் மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி

கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

கோத்தா கெமுனிங்கில் 6 இந்திய சிறு வியாபாரிகளுக்கு  வணிகச் சாதனங்கள் – 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உதவி

கோத்தா கெமுனிங்கில் 6 இந்திய சிறு வியாபாரிகளுக்கு வணிகச் சாதனங்கள் – 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உதவி

மலேசிய இந்தியர்களின் வலிகளையும் பங்களிப்புகளையும் ஆவணப்படுத்தும் 500 பக்க நூல் வெளியீடு

மலேசிய இந்தியர்களின் வலிகளையும் பங்களிப்புகளையும் ஆவணப்படுத்தும் 500 பக்க நூல் வெளியீடு