Oct 12, 2026
Thisaigal NewsYouTube

பிறை சட்டமன்றத் தொகுதியில் அன்னையர் தினக் கொண்டாட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிறை சட்டமன்றத் தொகுதியில் அன்னையர் தினக் கொண்டாட்டம்

பிறை, மே.28-

பினாங்கு பிறை சட்டமன்றத் தொகுதியில் கடந்த மே 25 ஆம் தேதி அன்னையர் தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிறை சட்டமன்றச் சேவை மையத்துடன் இணைந்து பிறை மகளிர் அமைப்பு ஏற்பாட்டில் சால் லெங் பார்க் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிறை சட்டமன்ற உறுப்பினரும், பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுச் சிறப்பித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்த அன்னையர்களுக்கும் டத்தோஸ்ரீ சுந்தராஜு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

ஒரு குழந்தையை ஈன்றெடுத்து, அதனைப் பேணிக் காப்பதிலும், குடும்பச் சுமையைச் சுமப்பதிலும் அன்னையர்களின் பங்களிப்பு குறித்து டத்தோஸ்ரீ சுந்தராஜு வெகுச் சிறப்பாகப் பேசியது, பார்வையாளர்களின் கவன ஈர்ப்பாக அமைந்தது.

தாய்மார்களின் அளப்பரியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிகழ்விற்கு வருகை புரிந்த B40 குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு 60 க்கும் மேற்பட்ட அன்பளிப்புப் பொட்டலங்களை டத்தோஸ்ரீ சுந்தராஜு எடுத்து வழங்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →