கோலாலம்பூர், அக்டோபர்.10-
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டதைத் போன்று அனைத்து மலேசியர்களுக்கும் அடுத்த ஆண்டும் மீண்டும் தலா 100 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போல 2026 ஆம்ஆண்டும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா எனப்படும் எஸ்டிஆர் மற்றும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா எனப்படும் சாரா ஆகிய உதவித் திட்டங்கள் நிலைநிறுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் அடுத்த ஆண்டு சீனப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் மத்தியப் பகுதியில் இந்த 100 ரிங்கிட் வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.








