நல்லாட்சிக்கான அரசின் வியூகம்
2024–2028 ஆம் ஆண்டுக்கான தேசிய ஊழல் எதிர்ப்பு வியூகத்தை (NACS) பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த 2024 மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்ததை அடுத்து, இம்முயற்சி கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த 2025 ஜூன் மாதம் வரை 10 துணை வியூகங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

NACS என்பது ஊழலை எதிர்கொள்வதற்கான அரசின் முழுமையான முயற்சிகளின் தொடர்ச்சியாகும். இது ஊழல் தடுப்பு, கல்வி மற்றும் பரந்த அளவிலான பொதுமக்களின் பங்களிப்பை வலியுறுத்தும் பன்முக அணுகுமுறையைக் கொண்டுள்ளது. ஊழல் இல்லாத, உயர் நெறிமுறைகள் கொண்ட மலேசியாவை உருவாக்குவதே இதன் குறிக்கோள். இதுவரை எட்டியுள்ள முன்னேற்றங்கள் அனைத்தும், NACS துணை வியூகங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் செயலகமாகப் பங்கு வகிக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உட்பட ஒன்பது முக்கிய அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களது வியூகங்களைத் திறம்பட செயல்படுத்தியதையே பிரதிபலிக்கிறது.
சாதனைகள்
மொத்தம் 16 துணைத் திட்டங்களில், ஐந்து 2024-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டன. மீதமுள்ள 11 திட்டங்கள் 2025 ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவுச் செய்யப்பட்டன. இந்த முன்னேற்றம் மிகுந்த செயல்திறன் மற்றும் உறுதியான அர்ப்பணிப்பைக் காட்டுவதாக, NACS-ன் கீழ் குறிப்பிடப்பட்ட முக்கிய நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் இதில் ஈடுபட்டுள்ள அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் முழுமையாகச் செயல்பட்டுள்ளன என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கியுள்ளது.
முக்கிய சவால் என்பது இனி திட்டங்களை உருவாக்குவதில் இல்லை, ஆனால் அவற்றை அடித்தட்டு நிலை வரையில் முழுமையாகவும் பயனுள்ள வகையிலும் செயல்படுத்தும் திறனில்தான் உள்ளது. எனவே, தேசிய நிர்வாகத் திட்டமிடல் பிரிவு (BPGN), மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கீழ், NACS உடைய அனைத்து துணைத் திட்டங்களும் திட்டமிட்ட காலக்கெடுவுக்கும் இலக்குகளுக்கும் ஏற்ப செயல்படுத்தப்படுவதை உறுதிச் செய்வதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த முயற்சியை ஆதரிப்பதற்காக, இரண்டு தனித்தனி டாஷ்போர்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவை MACC-யின் உள் சர்வர்களில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
• முதல் டாஷ்போர்டு r-NACS என அழைக்கப்படுகிறது. இது NACS செயலகத்திற்கும் முன்னணி அமைச்சகங்களும் இடையே காலாண்டு செயல்திறன் கண்காணிப்புக் கருவியாகச் செயல்படுகிறது. தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட தரவின் அடிப்படையில் முறையான உள்நாட்டு கண்காணிப்பை இது எளிதாக்குகிறது.
• இரண்டாவது டாஷ்போர்டு d-NACS எனப்படும். இது MACC-இன் வெளிப்படைத்தன்மை முயற்சியின் ஒரு பகுதியாக பொதுமக்கள் அணுகலுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அமைச்சகமும் நிறைவேற்றிய துணைத் திட்டங்களின் எண்ணிக்கையையும், அதனுடன் தொடர்புடைய கொள்கைகள், சட்டத் திருத்தங்கள், ஆய்வுகள் மற்றும் பிற அமலாக்க ஆவணங்களையும் இது காட்டுகிறது.
NACS-இன் கீழ் உள்ள 16 துணைத் திட்டங்களின் முழுமையான செயல்படுத்தல் ஊழல் எதிர்ப்பு தேசியத் திட்டத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். பல்வேறு அமைச்சகங்களும் முகவைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டது பொதுத்துறை நிர்வாகத்தை மேம்படுத்தவும், அரசாங்க நிறுவனங்களின் நேர்மையை வலுப்படுத்தவும் நேரடியானத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட முக்கியத் துணைத் திட்டங்கள்
1. உள்துறை அமைச்சகத்தால் எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. உயர்கல்வி அமைச்சகத்தால், உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு Integrity, Anti-Corruption, and Corruption (KIAR 2.0) பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டது.
3. கல்வி அமைச்சகத்தால், நல்லொழுக்கம் மற்றும் உயர்ந்த மதிப்புகள் கருப்பொருள் வாரம் நடத்த Character Ambassador Toolkit உருவாக்கப்பட்டது.
4. பொதுச்சேவைத் துறையால், நிர்வாகம், நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு வலுப்படுத்தும் தொகுப்பு (MPGIA) அறிமுகப்படுத்தப்பட்டது.
5. MACC-இனால் புகார் மேலாண்மை அமைப்பு 3.0 மேம்படுத்தப்பட்டது. இதன் மூலம் புகார் அளிப்போர் தங்களின் வழக்குகள் குறித்து விரைவான மற்றும் தெளிவான பின்னூட்டத்தைப் பெற முடிகிறது.
6. தேசிய தணிக்கைத் துறையால், உள்துறைத் தணிக்கைப் பிரிவுகளில் தேசிய தணிக்கை அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
7. அரசுப் பணியாளர் ஆட்சேர்ப்பு செயல்முறையை வலுப்படுத்த E-Vetting System 3.0 மேம்படுத்தப்பட்டது (முதன்மை பாதுகாப்பு அதிகாரி அலுவலகம்).
8. MACC-இனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சபை உறுப்பினர்களுடன் பங்குதாரர் ஈடுபாட்டு அமர்வுகள் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
9. Deferred Prosecution Agreements (DPA) நடைமுறைப்படுத்தல் குறித்த ஆய்வு நிறைவேற்றப்பட்டது (MACC).
10. நாடாளுமன்ற சேவைச் சட்டம் 2025 சட்ட விவகாரங்கள் பிரிவால் (BHEUU) அறிமுகப்படுத்தப்பட்டது.
11. நிதி அமைச்சகத்தால், CIDB-இல் பதிவு செய்யப்பட்ட G7 தர நிறுவனங்களுக்கு MS ISO 37001 ABMS சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது.
12. கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சகத்தால், பழங்குடியினர் சமூகத்துடன் ஈடுபாடு குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
13. தேசியத் தணிக்கைத் துறையால், Auditor General’s Online Dashboard (AGD) தொடர்ச்சியான கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டது.
14. தொடர்பு அமைச்சகத்தால், Film in Malaysia Incentive (FIMI) கீழ் குறிப்பிட்ட படைப்புத் திட்டங்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
15. நிதி அமைச்சகத்தால், அரசு கொள்முதலில் பங்கேற்க நிறுவனங்கள் தங்களின் பயனடைப்போர் உரிமையை அறிவிக்க வேண்டும் என்ற விதி அமல்படுத்தப்பட்டது.
16. பொதுச்சேவைத் துறையால், பணியிட மாறுதல் மற்றும் Demerit Performance Evaluation (DEEP) நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சாதனைகள் கல்வி, சட்டம், பொது பங்கேற்பு, நிறுவன வலிமைப்படுத்தல் ஆகிய துறைகளில் பரவலானத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது NACS-இன் முக்கிய நோக்கம்—சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நேர்மையை வேரூன்றச் செய்வது—என்பதுடன் இணைகிறது.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை
பொதுமக்களின் பாதுகாப்பு எப்போதும் அனைத்து மலேசியர்களுக்கும் ஒரு முக்கியக் கவலையாக இருந்து வருகிறது. NACS இன் ஒரு முக்கிய துணைத் திட்டமாக, உள்துறை அமைச்சகம் (KDN) 2024 அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வந்த மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம், ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மையின் சிறப்பான நடைமுறைகளின் மூலம், மலேசியாவின் பாதுகாப்பு, அமைதி மற்றும் சுயாட்சியை பாதுகாக்கும் உலகத் தரம் வாய்ந்த எல்லைப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ஆயுத கடத்தல், போதைப் பொருள் வியாபாரம், மனிதக் கடத்தல் போன்ற பல்வேறு எல்லைத் தாண்டும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவதற்கும், நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத பொருளாதாரச் செயல்பாடுகளை எதிர்கொள்வதற்கும் அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கிறது. மேலும், டீசல், சிகரெட் மற்றும் பிற சலுகைப் பொருட்கள் கடத்தலைத் தடுப்பதற்கான முயற்சிகள் தேசிய வருவாய் இழப்புகளைத் தடுக்கவும், அதனைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கவும் மிகவும் அவசியமாகும்.
அரசாங்கம், NACS வெறும் கொள்கை ஆவணமாக மட்டுமே இருக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. அதற்கு பதிலாக, மக்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் நடைமுறை அமலாக்கமாக மாற வேண்டும். ஆகையால், பயனுள்ள அமலாக்கம் தான் மையக் கவனமாக உள்ளது—ஒவ்வொரு கொள்கையும் சீர்திருத்த நடவடிக்கையும் பொதுமக்களுக்கு நேரடியான நன்மைகளை வழங்க வேண்டும். அவை சில சமயங்களில் நீண்ட காலத்தில்தான் முழுமையாகக் கிடைக்கக் கூடினும், அந்த நீண்டகாலப் பயன்களில் வலுவான நிர்வாகம், மேம்பட்ட தேசிய பாதுகாப்பு, நிலைத்த மற்றும் போட்டித்தன்மையுள்ள பொருளாதார வளர்ச்சியும் அடங்கும்.
சிறந்த தேசத்திற்காக இளைஞர்களை உருவாக்குதல்
இது சரியான நேரமாக இருக்கிறது. ஏனெனில் கல்வி அமைச்சகமும் உயர்கல்வி அமைச்சகமும் தேசிய பாடத்திட்டத்தில் நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்புக் கல்வியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளன. இன்று, தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி பாடப்புத்தகங்களில் நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி பயிற்சி (TVET) மாணவர்களுக்காக புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் நீண்டகால ஊழல் எதிர்ப்பு போராட்டம், வெறும் சட்ட அமலாக்கத்தைத் தாண்டி உள்ளது. அதற்கு நிலைத்திருக்கும் ஊழல் எதிர்ப்பு சூழலை உருவாக்குதல் அவசியமாகிறது. இதைப் பெற, சமூகத்தின் மதிப்புகள், சிந்தனை முறைகள், பண்பாடு ஆகியவற்றில் முழுமையான மாற்றம் தேவைப்படுகிறது.
சிறு வயதிலிருந்தே நேர்மை சார்ந்த மதிப்புகளால் வளர்க்கப்படும் இளம் தலைமுறை, எதிர்காலத்தில் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் போது, நாட்டின் நிர்வாக அமைப்பில் வடிவமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கக்கூடிய சக்தி உடையதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, மதிப்புரிமை கல்வி மற்றும் இளைஞர்களிடையே நேர்மை கலாச்சாரத்தை உருவாக்குதல், இனி துணை முயற்சிகளாக மட்டும் பார்க்கப்படவில்லை. அவை இப்போது NACS இன் முக்கிய வியூகமாகக் கருதப்படுகின்றன.

தனியார் துறை நிர்வாகம் மற்றும் இணக்கம்
அதே நேரத்தில், தனியார் துறையின் பங்கு இனி விருப்பத்திற்குரிய ஒன்றாகக் கருதப்பட முடியாது. மாறாக, நாட்டின் ஊழல் எதிர்ப்பு வியூகம் பயனுள்ளதாக அமைய, இத்துறை இப்போது ஒரு முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாதக் கூறாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமைகள், ஊழல் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி அரசுத் துறையும் தனியார் துறையும் சந்திக்கும் இடங்களில் குறிப்பாக கொள்முதல் செயல்முறைகள், முதலீட்டு ஒப்புதல்கள் மற்றும் திட்ட அனுமதிகள் போன்றவற்றில் நடைபெறுவதை வெளிப்படுத்துகின்றன. எனவே, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறையை உருவாக்க இரு துறைகளுக்குமான நெருக்கமான ஒத்துழைப்பு அவசியமாகிறது.
NACS அமைப்பின் கீழ், அரசு தனியார் துறை விதிகளைப் பின்பற்றும் பங்கேற்பாளராக மட்டுமல்லாமல், ஊழல் தடுப்பதில் வியூகக் கூட்டாளியாக மாறுவதற்கு ஊக்குவிக்கும் விரிவான அணுகுமுறையை வடிவமைத்துள்ளது. இதன் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, MS ISO 37001 தரநிலைக்கு ஏற்ப Anti-Bribery Management System (ABMS) ஐ அமல்படுத்துவதை ஊக்குவிப்பதாகும். குறிப்பாக 100 மில்லியன் ரிங்கிட் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள அரசுக் கொள்முதல் திட்டங்கள் அல்லது ஒப்பந்தங்களைப் பெறும் நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
இந்த முயற்சியை வலுப்படுத்துவதற்காக, தேசிய ஆட்சி தொடர்பான சிறப்பு அமைச்சரவைக் குழு (JKKTN), அரசுக் கொள்முதல் சான்றிதழ் (SPKK) பெற்றுள்ள அனைத்து G7 தர நிறுவனங்களும், 100 மில்லியன் ரிங்கிட் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள அரசுக் கொள்முதல் ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பினால், 2 ஆண்டுகளுக்குள் MS ISO 37001 Anti-Bribery Management System (ABMS) சான்றிதழைப் பெற வேண்டும் என்று ஊக்குவிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
MS ISO 37001 சான்றிதழ் என்பது நிறுவனங்கள் தங்களது உள்நாட்டு ஊழல் எதிர்ப்பு மேலாண்மையை மேம்படுத்தும் உறுதிப்பாட்டை மட்டுமல்லாமல், குறிப்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 (MACC Act 2009) பிரிவு 17A-இன் சட்ட விதிகளுடன் இணங்குவதைப் பிரதிபலிக்கிறது.
ஊழல் தடுப்பு முயற்சிகள் மற்றும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகைகள்
NACS முழுமையான செயல்படுத்தலின் ஒரு பகுதியாக, ஐந்தாவது வியூகம் தனியார் துறை மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் பல்வேறு தூண்டுதல் ஊக்கத் தொகைகளை அறிமுகப்படுத்துகிறது.
தற்போது பரிசீலிக்கப்பட்டு வரும் முக்கிய ஊக்கத்தொகைகளில் ஒன்று, MACC அங்கீகரித்த குடிமக்கள் அமைப்புகள் (CSOs) நடத்தும் ஊழல் தடுப்பு திட்டங்களில் பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்குதல் ஆகும். இந்த முயற்சி, பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதோடு, சமூகங்களில் நேர்மை கலாச்சாரத்தை உருவாக்கும் ஊக்கிகளாக CSOs செயல்பட வைக்கும்.
மேலும், தவறுகள் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் ‘whistle-blowers’-க்கு ஊக்கத்தொகைகள் வழங்கும் வாய்ப்புகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது. இது அவர்கள் காட்டும் துணிச்சலையும், பொதுப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்பையும் அங்கீகரிக்கும் முயற்சி.
நீதித்துறைக்கு கூடுதல் ஆதரவாக, ஊழல் வழக்குகளில் சாட்சிகளுக்கான தற்போதைய கொடுப்பனவு விகிதங்களை மறுபரிசீலனை செய்யும் ஆய்வும் நடைபெற்று வருகிறது.இதன் நோக்கம், குற்றவியல் விசாரணைகளில் உதவும் தனிநபர்களுக்கு நியாயமான மற்றும் தகுந்த அங்கீகாரத்தை வழங்குவதாகும்.
அதேபோல், MS ISO 37001 தரநிலையை அடிப்படையாகக் கொண்ட Anti-Bribery Management System (ABMS) சான்றிதழைப் பெறும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை, வெளிப்படையான, பொறுப்பான மற்றும் ஊழல் இல்லாத நிறுவன ஆட்சியை ஊக்குவிக்கும் முக்கிய ஊக்கியாக இருக்கும்.
குறிப்பாக, இந்த வியூகம் படைப்புத் துறையும் ஊடகத் துறையிலும் விரிவடைகிறது. மலேசிய உள்ளடக்க வளர்ச்சி நிதி (FIMI) வழியாக, ஊழல் தடுப்பு கருவை மையமாகக் கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படைப்புகளை உருவாக்க உள்ளூர் தயாரிப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன் மூலம், சமூக சிந்தனைகளில் நேர்மறை மாற்றத்தை படைப்பாற்றல் வாயிலாக உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
நேர்மையை அடிப்படையாகக் கொண்ட அரசு–தனியார் துறைகளின் வலுவான ஒத்துழைப்பே, நீண்டகாலத்தில் நியாயமான, தாங்கும் திறன் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியின் அடித்தளம் ஆகும். இது, ஆட்சி மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை அளவில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மலேசியா உருவாக வேண்டும் என்ற நாட்டின் இலக்குடன் இணைந்துள்ளது.
எனவே, NACS ஒரு சாதாரண கொள்கை ஆவணமாக உருவாக்கப்படவில்லை. அது முழுமையான செயல்படுத்தலைத் தேவைப்படுத்தும் ஒரு வியூகக் கட்டமைப்பு. கோஷங்கள் மட்டுமின்றி, உண்மையான விளைவுகளை வழங்கும் மாற்றுத் துறையுணர்வு அணுகுமுறை இது. அதிலும் முக்கியமாக, இது அரசாங்க நிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் வலுப்படுத்தும் முயற்சி. சுத்தமான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான மலேசியாவை உருவாக்கும் இந்த உறுதிப்பாட்டில் எந்தச் சமரசமும் செய்ய முடியாது.

CPI சிறப்பு பணிக்குழு
12வது மலேசியத் திட்டத்தின் இடைக்கால மதிப்பீட்டில், மலேசியா 2033-க்குள் உலகின் முன்னணி 25 நாடுகளில்(Corruption Perceptions Index – CPI) இடம்பிடிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த தேசிய இலக்கு, முழு அரசாங்க இயந்திரமும், சமூகத்தின் பூரண பங்களிப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் கோருகிறது.இந்த இலக்கை அடைய, அரசாங்கம் CPI சிறப்பு பணிக்குழுவை நிறுவியுள்ளது. இதற்கு மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் Tan Sri Dato’ Sri Shamsul Azri Abu Bakar தலைவராக உள்ளார். இக்குழுவின் முக்கியப் பொறுப்பு, நேர்மையும் ஆட்சியும் சார்ந்த பல்வேறு முன்னேற்றங்களை ஒருங்கிணைப்பது. இதன் மூலம், ஊழல் எதிர்ப்பு திட்டம் என்பது பகிர்ந்து கொள்ளப்படும் பொது உறுதிப்பாடு என்பதை வலியுறுத்துகிறது.
மலேசியாவின் Corruption Perceptions Index (CPI) நிலையை மேம்படுத்துவதற்கான தகுந்த உத்திகள் உருவாக்கும் நோக்கத்துடன் CPI சிறப்பு பணிக்குழுநிறுவப்பட்டது.தற்போது, இந்தக் குழு CPI-யுடன் தொடர்புடைய ஒன்பது ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இடைவெளிகள் மற்றும் கருத்துக்களை ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம், வலியுறுத்தப்பட்ட குறைகளுக்கு நேர்மையான சீர்திருத்தங்கள்அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யப்படுகிறது.
இந்த முயற்சியின் முக்கியக் கவனம், மலேசியாவின் தரவரிசையை காகிதத்தில் மட்டும் உயர்த்துவது அல்ல, மக்களால் உணரக்கூடிய உண்மையான சீர்திருத்தங்களைகொண்டு வருவதே ஆகும். இதில் சட்டத் தளத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் வாங்குதல் செயல்முறைகளில் அதிக வெளிப்படைத்தன்மை அடங்கும்.
மேலும், இந்த உத்தி சிறப்பாக செயல்படுவதற்காக, 2024 அக்டோபர் மாதம் முதல், CPI சிறப்பு பணிக்குழுவின் கீழ்ஆறு கவனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள், தொடர்புடைய அரசு அமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும். இவை தங்களது முன்னுரிமைப் பகுதிகளின் அடிப்படையில் மேம்பாட்டு நடவடிக்கைகள்உருவாக்குவதற்குப் பொறுப்பானவை.
நாட்டின் CPI நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஆறு முக்கிய முன்னுரிமைப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
1. சட்ட அமலாக்கம் (Enforcement) – சட்ட அமலாக்க நிறுவன ஒருங்கிணைப்பு ஆணையம் (EAIC) தலைமை வகிக்கிறது.
2. அரசு நிதி மேலாண்மை (Public Fund Management) – நிதி அமைச்சகம் தலைமை வகிக்கிறது.
3. வணிகப் போட்டித்திறன் (Business Competitiveness) – மலேசிய உற்பத்தித்திறன் கழகம் (MPC) தலைமை வகிக்கிறது.
4. முதலீட்டு அபாயம் (Investment Risk) – முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் (MITI) தலைமையில்
5. சட்டம் (Legislation) – சட்ட விவகார பிரிவு (BHEUU), பிரதமர் துறை தலைமை வகிக்கிறது.
6. வியூக தகவல் தொடர்பு (Strategic Communication) – தகவல் தொடர்பு அமைச்சகம் தலைமை வகிக்கிறது.
இந்த கவனிப்புக் குழுக்கள், முக்கிய மேம்பாட்டு துறைகளை அடையாளம் காணுதல், பொருத்தமான தலையீடுகளை முன்மொழிதல் மற்றும் தொடர்புடைய முயற்சிகளின் விளைவுகளை கண்காணித்தல் போன்ற முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றன. இத்தகைய முயற்சிகள், மலேசியாவின் ஆட்சிமுறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் திறனை மேம்படுத்தி, பொதுமக்கள் நம்பிக்கை மற்றும் முதலீட்டு சமூக நம்பிக்கையையும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவின் Corruption Perception Index (CPI) நிலையை வலுப்படுத்தும் முயற்சிகள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ஒன்றின் பொறுப்பு மட்டுமல்ல; அது முழு அரசாங்க இயந்திரத்தின் கூட்டு பொறுப்பு ஆகும். இதில், தனியார் துறை மற்றும் குடிமை சமூகத்தின் முழுமையான ஆதரவும் அவசியமாகிறது.

மேலிடத்திலிருந்து வரும் அரசாணை: JKKTN
தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தேசிய ஆட்சிமுறை சிறப்பு அமைச்சரவை குழு (JKKTN), ஆட்சிமுறை, நேர்மை மற்றும் சட்ட சீர்திருத்தம் தொடர்பான புதிய கொள்கைகளை உருவாக்குவதிலும், ஒருங்கிணைந்த மேம்பாடுகளை நடைமுறைப்படுத்துவதிலும், அரசின் உயர்மட்ட தளமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இக்குழுவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தலைமை வகிக்கிறார். இதன் செயலாளர் பொறுப்புகளை தேசிய ஆட்சிமுறை மற்றும் திட்டமிடல் பிரிவு (BPGN), MACC மேற்கொள்கிறது.
JKKTN, பொதுத்துறை மற்றும் அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களில் ஆட்சி முறையை வலுப்படுத்தும் நோக்கில், பல முக்கிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
2023 மற்றும் 2024 க்கு இடையில் JKKTN ஆல் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய கொள்கைகளாவன:
• 2024 ஏப்ரல் 30-ம் தேதி – பிரதமர் துறை செயலாக்க ஒருங்கிணைப்பு அலகு (ICU) மூலம், மத்திய சட்டப்பூர்வ அமைப்புகளின் (BBP) மேலாண்மை மற்றும் ஆட்சிமுறையை வலுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
• 2024 மே 20-ம் தேதி– அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (SOEs) மற்றும் உத்தரவாத வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் (CLBG) தொடர்பானபிரதமர் உத்தரவு எண் 1 / 2023 அறிவிக்கப்பட்டது.
• 2024 மே 21-ம் தேதி– நிர்வாக உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களின் மேலாண்மை வழிகாட்டுதல் அமலுக்கு வந்தது. இதன் நோக்கம், ஆதரவு கடிதங்கள் தனிப்பட்ட அல்லது அரசியல் லாபத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், அரசு நிர்வாகத்தில் நலன் மோதலைத் தவிர்க்கவும் ஆகும்.
2024 மே 7-ம் தேதி JKKTN கூட்டத்தில், அரசு, மத்திய சட்டப்பூர்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் சட்ட அடிப்படையை ஆராய ஒப்புக் கொண்டது. இது, தேசிய நிறுவன மற்றும் ஆட்சிமுறை சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இதற்கிடையில், செயலாக்க முகமை நேர்மை ஆணையம் (EAIC), காவல் நிலைய மரணங்கள் தொடர்பான மதிப்பாய்வு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றவும், நீண்டகால தடுப்பு நடவடிக்கைகளை வடிவமைக்கவும், சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது.
மேலும், JKKTN பல முக்கிய சட்ட வரைபுகளுக்கு தொடக்க அனுமதி வழங்கியுள்ளது:
• தகவல் சுதந்திரச் சட்டம்
• அரசாங்க கொள்முதல் சட்டம்
• நம்பிக்கை (இன்கார்பரேஷன்) (திருத்தம்) மசோதா 2024

இந்த நடவடிக்கைகள் பொதுத் தகவல் மற்றும் நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் உறுதியான முயற்சிகளாகும். இதன் மூலம் நாட்டின் நிர்வாக அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையை உயர்த்துவதே குறிக்கோளாகும்.
JKKTN ஒப்புதல் அளிக்கும் ஒவ்வொரு கொள்கையும், அரசின் ஆட்சிமுறை மற்றும் நேர்மையை நிறுவன ரீதியாக வேரூன்றச் செய்யும் விரிவான கட்டமைப்பின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இது அனைத்து துறைகள், சேவை வழங்கல் மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான அடித்தளமாகவும் அமைகிறது.
2025 முழுவதும் மேலும் பல கொள்கை முன்முயற்சிகள் அறிவிக்கப்படும் என்று MACC எதிர்பார்க்கிறது. இது, ஆட்சிமுறையை வலுப்படுத்துவதில் மற்றும் உயர் தாக்கம் செலுத்தும் சீர்திருத்தங்கள் மூலம் ஊழலை முறையாக எதிர்ப்பதில் JKKTN-ன் வியூகத் தளமான பங்கிற்கு ஏற்பதாகும்.
முடிவாக, நேர்மையை வலுப்படுத்தி, ஊழலை எதிர்க்கும் அரசின் பலவழிப் போக்கு, வெளிப்படையான, பொறுப்புடைய மற்றும் வலுவான தேசத்தை கட்டியமைக்கக் கூடிய உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. கல்வி அமைப்பில் ஊழல் எதிர்ப்பு மதிப்புகளை வேரூன்றச் செய்வது முதல், சான்றிதழ்கள் மற்றும் ஆதரவு திட்டங்கள் மூலம் நிறுவன ஒழுங்கை ஊக்குவிப்பது வரை, இந்த முயற்சிகள் நீண்டகால நேர்மை பண்பாட்டில் முதலீடு செய்வதை வெளிப்படுத்துகின்றன. அரசுத் துறைகள், தனியார் துறை மற்றும் குடிமக்கள் சமூகத்திற்கிடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பே, இந்த முயற்சிகள் மலேசியாவின் எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள மற்றும் நிலையான மாற்றமாக மாறுவதற்கான முக்கிய அச்சாக இருக்கும்.