Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பகாங், மெந்தகாப்பில் மிஸி ஏற்பாடு செய்த "நவீன வணிகங்களுக்கான மடிக்கணினி பழுது மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்" பயிற்சித் திட்டத்தின் நிறைவு விழா
சிறப்பு செய்திகள்

பகாங், மெந்தகாப்பில் மிஸி ஏற்பாடு செய்த "நவீன வணிகங்களுக்கான மடிக்கணினி பழுது மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்" பயிற்சித் திட்டத்தின் நிறைவு விழா

Share:

மெந்தகாப், மே.31-

மலேசிய இந்திய திறன் முன்னெடுப்பான மிஸி ஏற்பாடு செய்த நவீன வணிகத்திற்கான மடிக்கணினி பழுதுபார்த்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பயிற்சித் திட்டம், கடந்த மே 26 ஆம் தேதி பகாங், மெந்தகாப்பில் தொடங்கி, ஐந்து நாட்கள் நடைபெற்றது. அதன் நிறைவு விழா நேற்று நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 25 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். நவீன பொருளாதாரத்தில் மிகவும் மதிப்புமிக்க தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் திறன்கள் மூலம் அவர்களை மேம்படுத்துவதை மிஸியின் இந்த பயிற்சித் திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மடிக்கணினி பழுதுபார்த்தல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் தீவிரப் பயிற்சி அளிப்பதாகும். இது, பங்கேற்பாளர்கள் வேலைகளைப் பெற அல்லது சொந்தமாகத் தொழில்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளைத் திறக்கிறது. இதன் மூலம் நிலைத்தன்மையுடன் நிதி வளம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறது.

நிறைவு விழா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

பகாங் மாநில பயனீட்டாளர் விவகாரங்கள் மற்றும் மனிதவள ஆட்சி குழு தலைவர் சிம் சோன் சியாங், மனிதவள அமைச்சான கெசுமாவின் சிறப்புப் பணி அதிகாரி டெக்காம் லூர்ட்ஸ், மிஸியின் முன்னாள் தெமர்லோ பிகேஆர் கிளைத் தலைவர் மகேஸ்வரன் ராமச்சந்திரன் ஆகியோர் இந்தத் திட்டத்தின் வெற்றிக்குப் பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், நாடு முழுவதும் உள்ள இந்திய சமூகத்திற்கான திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து மிஸி ஈடுபட வேண்டும் என்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் சிம் சோன் சியாங் கேட்டுக் கொண்டார்.

Related News

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு