ஈப்போ, செப்டம்பர்.05-
வரலாற்றுச் சிறப்புமிக்க ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு மீலாது நபி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி "ஒற்றுமை ஊர்வலம்" இன்று நடைபெற்றது.

நபிகள் நாயகம் பிறந்த தினத்தையொட்டி நபி பிறந்த இந்த ரபி உல் அவ்வல் ( Rabiul awal ) மாதம், பிறை ஒன்றில் இருந்து 13 வரையிலும் ஒவ்வொரு நாளும் இரவு, நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாற்றுச் சிறப்புகளை இப்பள்ளி வாசலில் தொடராகப் பேசப்பட்டது.

அதன் இறுதியாக இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் பேராக் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் பெண்கள், இளைஞர்கள், சிறார்கள் என கிட்டத்தட்ட 700 பேர் நபியின் நேசத்தை வெளிப்படுத்தினர்.

உலக மக்கள் எல்லோருக்காவும் நலம் வேண்டி சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது என்று ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பான முறையில் ஊர்வலம் நடைபெற்றது. அடுத்தாண்டு மேலும் சிறப்புடன் நடத்தப்படும் என்று ஷேக் முஜிபுர் ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்தார்.