Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தற்காப்புக் கலையைக் கற்க மகளிர்களின் பங்கேற்பு அதிகப்பு
சிறப்பு செய்திகள்

தற்காப்புக் கலையைக் கற்க மகளிர்களின் பங்கேற்பு அதிகப்பு

Share:

ஈப்போ

சிலம்பம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான, தற்காப்புக் கலை மற்றும் வீர விளையாட்டாகும்.

இந்த விளையாட்டு நமது நாட்டில் அரசாங்கத்தால் அங்கரிக்கப்பட்ட விளையாட்டாக விளங்குகிறது. நடந்து முடிந்த சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் ஒரு விளையாட்டாகவும் அங்கிகரிக்கப்பட்டது. அப்போட்டியில் பேராக்கை பிரதிநிதித்து கலந்து கொண்ட மாணவர்கள் தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.

பேரா , ஈப்போவில் அரிமா சிலம்பம் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த கலையைப் பயின்று, பலர் சிறந்து விளங்கி வருவதாக அதன் பயிற்றுனர் செந்தாமரை அருணாசலம் ஜெயேந்திரன் கூறினார்.

நாளை செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசிய தினத்தை முன்னிட்டு ஈப்போ பாடாங்கில் ஒன்று திரண்ட அவ்வியக்கத்தின் மாணவர்கள் தாங்கள் பயின்ற சிலம்பக் கலையை பொதுமக்கள் மத்தியில் வெளிப்படுத்தினர் என்று அவர் தெரிவித்தார்.

இன்று அதிகமான பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைக் குறிப்பாக தங்களின் பெண் பிள்ளைகளைச் சிலம்பக் கலை பயிற்சியில் ஈடுபடுத்த அதிக ஆர்வம் காட்டி வருவதாக செந்தாமரை கூறுகிறார்.

தமது தலைமையிலான அரிமா சிலபக் கலை பயிற்சி மையத்தில் சுமார் 200 மாணவர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் அதிகமான மாணவர்கள் பெண்கள் என்று செந்தாமரை பெருமிதம் தெரிவித்தார்.

இந்த பயிற்சியானது எதிரிகளிடமிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவும், நமது உடல் வலிமையையும், மன உறுதியையும் வளர்க்கவும் பயன்படுகிறது.

அரிமா சிலம்பம் மையத்தின் மாஸ்டராக இருந்து அ. அரவிந்தன் கடந்த 30 ஆண்டுகளாக சிறப்புடன் இப்பயிற்சியை வழி நடத்தி வருவதாக செந்தாமரை குறிப்பிட்டார்.

Related News