Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சிறப்பு செய்திகள்

மலேசியா, பினாங்கில் 17வது எடிசன் தமிழ்த் திரை விருதுகள்

Share:

பினாங்கு, ஜன.25-

உலகத் தமிழர்களால் இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாக்குகள் பெற்று விருது வழங்கும் 17வது எடிசன் தமிழ் திரை விருதளிப்பு விழா வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் பினாங்கு SPICE ARENA அரங்கில், பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ பரிந்துரையின் பெயரில் பினாங்கு மாநில அரசு அனுசரணையுடன் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள பண்பலை வானொலி, தினசரி நாளிதழ், தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் மூலம் வாக்குகளை பெற்று தேர்வு செய்யப்படுகின்றவர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வின் தேர்வு பட்டியலில் 33 வரிசையில் தேர்ந்தெடுக்கப்படும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் பின்னணி பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள், நடன இயக்குனர்கள் என பல வரிசையில் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு பட்டியலில் இடம்பெற 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை திரையரங்கம் மற்றும் OTT தளங்களில் வெளியீடு கண்ட திரைப்படங்கள் தேர்வு பட்டியலில் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் விருது மற்றும் கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்வு, இந்திய கலைஞர்களுடன், மலேசிய கலைஞர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை படைக்க உள்ளனர் என்று எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். மேல் விபரங்களுக்கு +60166167708 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி