Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பேரா மாநில பிரதிநிதிகள் மாநாடு
சிறப்பு செய்திகள்

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பேரா மாநில பிரதிநிதிகள் மாநாடு

Share:

ஈப்போ, ஜூலை.21-

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பேரா மாநிலத்தின் 21 ஆவது பிரதிநிதிகள் மாநாடு கடந்த ஜுலை 19 ஆம் தேதி சனிக்கிழமை ஈப்போ, முத்தியாரா தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

பேரா மாநிலத் தலைவர் அப்துர் ரசாக் பின் யாக்கோப் தலைமையில் அதன் செயலாளர் எம். குணாசனினால் வழிநடத்தப்பட்ட இந்த மாநாட்டைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ G. சங்கரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தோட்டத் தொழில்துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள உறுப்பினர்களின் உரிமைக்காகத் தோட்டத் தொழிற்சங்கம் போராடும் அதே வேளையில் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகளைத் தோட்ட நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று டத்தோ ஜி. சங்கரன் தமது உரையில் வலியுறுத்தினார்.

கூடுதல் சலுகைகள் மற்றும் தோட்டக் குடியிருப்புக்களின் இலவச மின்சாரம், இலவச குடிநீர் போன்ற வசதிகளை வழங்குவது மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்க்கல்வி உபகாரச் சம்பளம் வழங்குவது மூலம் அதிகமான உள்ளூர் தொழிலாளர்கள் தோட்டத்துறையில் வேலை செய்வதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் அந்நியத் தொழிலாளர்களைத் தோட்ட நிர்வாகம் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று டத்தோ G. சங்கரன் தமது உரையில் வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறைந்தபட்ச வீட்டு வசதி சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் காய்கறி நடவு மற்றும் ஆடு மாடு வளர்ப்பு ஆகியவற்றுக்கு வழங்கப்படும் எட்டில் ஒரு பங்கு நிலத்தின் அளவு, மறுபரிசீலனை செய்து கூடுதல் நிலம் ஒதுக்கித் தரப்பட வேண்டும்.

நாள் அடிப்படையில் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம், 26 நாட்கள் என்ற நிலையில்லாமல், ஏற்கனவே உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப 24 நாட்களாக கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வழியுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் T. வீரன், அழைக்கப்பட்ட பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் என சுமார் 150 பேர் கலந்து சிறப்பித்தனர்.

Related News