Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கில் மனித வள அமைச்சின் ஏற்பாட்டிலான தேசிய ஒற்றுமை  வாரக் கொண்டாட்டத்தின் கடைசி நாள் நிகழ்வு   
சிறப்பு செய்திகள்

பினாங்கில் மனித வள அமைச்சின் ஏற்பாட்டிலான தேசிய ஒற்றுமை  வாரக் கொண்டாட்டத்தின் கடைசி நாள் நிகழ்வு   

Share:

பத்து காவான், ஜூலை.21-

மனித வள அமைச்சின் தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தின் கடைசி நாள் நிகழ்வு பினாங்கு, பத்து காவான் அரங்கில் இன்று நடைபெற்றது. அந்நிகழ்வு கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்டது. அந்த நான்கு நாள் நிகழ்வு மக்களின் ஊக்கமளிக்கும் ஆதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நான்கு நாட்களில் ஈராயிரத்து 300 மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஆயிரத்து 800க்கும் அதிகமானோர் ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பத்தாயிரத்து 420 ரிங்கிட் பிடிபிகே பணம் திரும்பப் பெறப்பட்டது. 27 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகை பிடிபிகே கட்டணமாகச் செலுத்தப்பட்டது.

2025 கெசுமா கண்காட்சித் தொடரில் இதுவரை பிடிபிகே பணம் அதிகம் வசூலிக்கப்பட்டது இந்த நிகழ்வில்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KSM

Related News