Oct 16, 2025
Thisaigal NewsYouTube
இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்
சிறப்பு செய்திகள்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.13-

தீபாவளித் திருநாளை எல்லோரும் பாகுபாடியின்றி குதூகலமாகக் கொண்டாடி மகிழ்வதே அத்திருநாளின் உன்னதமாகும். அந்த வகையில் பினாங்கு இராமகிருஷ்ண ஆசிரமத்தைச் சேர்ந்த பிள்ளைகள், காம்ப்ளெக்ஸ் புக்கிட் ஜம்பூலில் உள்ள கம்டார் பேரங்காடியில் புத்தாடைகளை வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை புக்கிட் ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தார்.

இராமகிருஷ்ண ஆசிரமத்தில் உள்ள 7 முதல் 17 வயது வரை உள்ள சுமார் 50 பேருக்கு புத்தாடைகள் வாங்கி கொடுக்கப்பட்டதுடன், அவர்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதியும், உணவும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு இலவசமாக தீபாவளி உடைகளை வழங்குவதற்கான இந்த ஏற்பாட்டிற்கு தங்களுக்கு துணையாக இருந்த பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் ஆ தியோங் ஆகியோருக்கு இவ்வேளையில் ராயர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும் என்று பாகான் எம்பி. லிம் குவான் எங் கேட்டுக் கொண்டதுடன், தமது தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இராமகிருஷ்ண ஆசிரமத் தலைவர், தமது நன்றியை ராயருக்குத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் ஆசிரமத்தைச் சேர்ந்த பிள்ளைகளுடன் இணைந்து, ராயர் தமது தீபாவளி வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

0

Related News