Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பசுமையும், ஒற்றுமையும் நிறைந்த மெலாவத்தி மாலின் மெர்டேக்கா கொண்டாட்டம்!
சிறப்பு செய்திகள்

பசுமையும், ஒற்றுமையும் நிறைந்த மெலாவத்தி மாலின் மெர்டேக்கா கொண்டாட்டம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.5-

இவ்வாண்டு, மலேசியாவின் 68-வது மெர்டேக்காவை முன்னிட்டு, பொழுதுபோக்கு, அறிவு, நல்வாழ்வு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், "லெஸ்தாரி மெர்டேக்கா" என்ற கருப்பொருளின் அடிப்படையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முற்றிலும் புதிய நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது தலைநகரிலுள்ள மெலாவத்தி மால் என்ற வணிக வளாகம்.

மெலாவத்தி மாலில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி துவங்கப்பட்ட இக்கொண்டாட்டம் செப்டம்பர் 30, 2025 வரை நீடிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தேச பக்தியைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வகையில் மால் முழுவதும் பசுமை கருப்பொருள் நிறைந்த கண்கவர் அலங்காரங்களும், சமூகக் கூட்டங்களும் மற்றும் பிரத்தியேகச் சலுகை விலைகளும் வழங்கி வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றது.

டெனு திரைப்படக் காட்சி

கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி உள்ளூர் திரைப்படமான Denu-வின் சிறப்புத் திரையிடல், இயக்குனர் மற்றும் குழுவினரின் திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகளைப் பகிர்ந்து கொள்வது, அற்புதமான அதிர்ஷ்டக் குலுக்கல் மற்றும் Denu தயாரிப்பின் பாராட்டுக்குரிய இலவச சினிமா டிக்கெட்டுகள் ஆகியவற்றுடன் நிறைவுற்றது.

இபிஎஃப் தகவல் பகிர்வு

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி ஓய்வூதியத் திட்டமிடல், விவேகமான முதலீடுகள் மற்றும் கடன் மேலாண்மை, மலேசியர்கள் நிதி சுதந்திரத்தை உண்மையாகவே அடைய ஊக்கம் அளித்தல் ஆகியவை அடங்கிய முக்கிய நிகழ்வு நடைபெற்றது.

குழந்தைகளுக்கான போட்டி

கடந்த ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில், குழந்தைகளுக்கான கதை சொல்லல் மற்றும் ஆடை அலங்காரப் போட்டி நடைபெற்றது. இதன் மூலம் மலேசிய கலாச்சாரத்தின் மீதான படைப்பாற்றல், நம்பிக்கை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கான ஒரு மகிழ்ச்சிகரமான தளமாக அமைந்தது.

மெர்டேகா யோகா

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற்ற நிகழ்வு, இக்கொண்ட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்தது. ஓன் ஸ்பேஸ் வெல்னஸ், வங்சா மாஜு உடன் இணைந்து, மெர்டேகா நாளில் அமைதி, ஒற்றுமை மற்றும் புதிய தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், சூரிய உதயத்தின் போது யோகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி யோகா பயிற்சி செய்தனர்.

லெஸ்தாரி சலுகை விலை

கடந்த ஆகஸ்ட் 22 முதல் வரும் செப்டம்பர் 30 வரை, பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேக வெகுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அவற்றில் குறிப்பாக, குறைந்தபட்சம் 168 ரிங்கிட்டிற்குப் பொருட்கள் வாங்கினால், மெர்டேகா சிறப்புப் பதிப்புப் பயண குடையும், குறைந்தபட்சமாக 268 ரிங்கிட்டிற்குப் பொருட்கள் வாங்கினால், “My Country and I: The Malaysia Agreement 1963” என்ற குழந்தைகளுக்கான புத்தகமும், ஜாலூர் கெமிலாங் உடையில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு, கையிருப்பு இருக்கும் வரை, இலவச தினசரி சிற்றுண்டிகளையும் பெறும் வகையில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், மெலாவதி மால் “லெஸ்டாரி மெர்டேகா” பிரச்சாரத்தின் போது, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட பசுமை கருப்பொருள் அலங்காரங்கள் மூலம் நிலைத்தன்மை மற்றும் தேசபக்தியை வலுப்படுத்தியிருக்கிறது.

அதே வேளையில், Lee, Gamers Hideout, Manhattan Fish Market, மற்றும் Tony Roma’s ஆகிய நிறுவனங்கள் பெருமையுடன் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “வழக்கமான கொண்டாட்டங்களைத் தாண்டி, ஊக்கமளிக்கும், கல்வி தரும் மற்றும் மலேசியர்களை ஒன்றிணைக்கும் அனுபவங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என்று மெலாவதி மாலின் விளம்பரப் பிரிவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

கேமரன்மலை,  தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

கேமரன்மலை, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!