ஷா ஆலாம், செப்டம்பர்.17-
இன்று செப்டம்பர் 17-ம் தேதி கோத்தா கெமுனிங், தாமன் ஶ்ரீ மூடாவில், The Grace Charismatic Fellowship சமூக விழா, பல கேளிக்கை விளையாட்டுகள், இலவச மருத்துவப் பரிசோதனை, தொண்டு நிறுவனங்களின் பொருட்கள் விற்பனை, வர்த்தகர்கள் கலந்துரையாடல் என மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநில சட்டமன்றம் சார்பில் 5,000 ரிங்கிட் வழங்கப்பட்டிருந்த நிலையில், புவான் யோகேஸ்வரி சாமிநாதன் தலைமையிலான எம்பிஎஸ்ஏ மண்டல 14 கவுன்சிலர் அலுவலகம் 1000 ரிங்கிட் நிதி அளித்தது.

அதே வேளையில், இவ்விழாவில், உடனடி நலத் திட்ட உதவிகளோடு, வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற நீண்ட காலப் பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இவ்விழாவில் பேசிய கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன், இது வெறும் நிதி திரட்டும் விழாவாக மட்டுமல்லாது, எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான முதல் படியாகவும், மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிப்பது போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.