கிள்ளான், நவம்பர்.07-
Persatuan Kebajikan Masyarakat Seri Perantau Selangor, Semarak Semangat Perpaduan இயக்கத்தின் ஏற்பாட்டில் கிள்ளான் அரச மாநகரின் ZonN N44A மாநகர் மன்ற உறுப்பினரின் தீபாவளி பொது உபசரிப்பு கடந்த நவம்பர் முதல் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு போர்ட் கிள்ளான், டேவான் செர்பாகுனா பண்டார் சுல்தான் சுலைமான் மண்டபத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

Persatuan Kebajikan Masyarakat Seri Perantau Selangor இயக்கத்தின் தலைவர் டாக்டர் அந்தோணி அ. சுசே முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில் கிள்ளான் அரச மாநகரின் ZonN N44A மாநகர் மன்ற உறுப்பினர் லீ ஃபூ ஹாவ் சிறப்பு வருகை புரிந்தார்.

அறுசுவை விருந்து உபசரிப்புடன் நடைபெற்ற இந்தத் தீபாவளி பொது உபசரிப்பில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். Pertubuhan Suara Belia Selangor அமைப்பின் தோற்றுநரும் முன்னாள் தலைவருமான டாக்டர் அந்தோணி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். DAP-யின் உதவி அமைப்புச் செயலாளரான லீ ஃபூ ஹாவ், இந்தியச் சமூகத்திற்குத் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்திப் பேசினார்.









