கோலாலம்பூர், ஜூலை.19-
தொழிற்சங்கமயமாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான விற்பனை மற்றும் சேவை வரி (SST) விகிதங்கள் மற்றும் மின்சார கட்டணங்களைச் சரிப்படுத்துதல் உள்ளிட்ட வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க, மனிதவள அமைச்சு (KESUMA) மடானி தொழிலாளர் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழிலாளர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து மே 1 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அட்டை, நடைமுறை, பொருத்தமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் தொழிலாளர்களின் சுமையைக் குறைக்க உதவும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இலக்கவியல் வடிவத்தில் மற்றும் QR குறியீட்டைக் கொண்ட இந்த அட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்களில் அட்டையை எளிதாக ஸ்கேன் செய்ய அனுமதிக்கிறது.
இந்த இலக்கவியல் அணுகுமுறை, அட்டையைக் கையோடு கொண்டு வர வேண்டியத் தேவை இல்லாமல், விரைவான பயன்பாட்டை அனுமதிக்கிறது. மேலும் பொதுச் சேவைகளை இலக்கவியல் மயமாக்கும் முயற்சிக்கு ஏற்ப உள்ளது.
பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்களின் நல்வாழ்வு தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதிச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளையும் இது பூர்த்தி செய்கிறது.
மேலும் குறிப்பாக, நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட கேந்திர பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து, பதிவுச் செய்யப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் 30 சதவீதம் வரை தள்ளுபடியை இந்த அட்டை வழங்குகிறது.
உணவு மற்றும் பானங்கள், உடைகள், பயணம் மற்றும் தங்குமிடம் போன்ற பல்பொருள் அங்காடிகளில் உட்பட பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கவும் இதைப் பயன்படுத்தலாம்.