கோலாலம்பூர், ஜூலை.22-
மலேசியாவின் ஆள் பலம் நிலையாக இருப்பதை உறுச்தி செய்வதற்கான முக்கிய உத்திகளைக் கொண்ட உலக வங்கியின் வேலை வாய்ப்பு நடைமுறைகள் அறிக்கையை மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று வெளியிட்டார். பெண்கள், நெகிழ்வான வேலை மற்றும் குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது எதிர்கால பணியாளர்களை ஈர்ப்பதில் ஒரு முதலீடாக அமையும் என அவர் தெரிவித்தார்.

பெண் பங்கேற்பு விகிதத்தை அதிகரிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நிலையானதாகவும் போட்டித்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்பதை அறிக்கை நிரூபிக்கிறது.

மலேசியாவில் வேலை வாய்ப்புக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மிகவும் முற்போக்கானதாகவும் பெண்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்ய கெசுமா உறுதிப் பூண்டுள்ளது. இதில் குழந்தை பராமரிப்பு வசதிகள் மற்றும் நெகிழ்வான வேலைகளை வழங்கும் முதலாளிகளுக்கான ஊக்கத் தொகை ஆகியவையும் அடங்கும் என ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
KSM