கூலிம், செப்டம்பர்.28-
கூலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுங்கை ஊலார் தோட்டம் பிரிவு 2 யிலுள்ள மக்கள் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் வழங்கப்பட்டிருக்கும் நோட்டீஸ்யைத் தற்காலிகமாக நிறுத்தும்படி மாநில அரசாங்கத்தின் கூட்டத்தில் பரிந்துரைச் செய்யப்பட்டிருப்பத்தாக கெடா மாநிலத்தின் மனித வளம், சீனர், இந்தியர் மற்றும் சியாமிய சமூகங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களின் ஆட்சிக் குழு உறுப்பினரும் கூலிம் சட்டமன்ற உறுப்பினருமான வோங் சியா ஜென் தெரிவித்தார்.

அண்மையில் சமூக வளைத்தளங்களில் சுங்கை ஊலார் தோட்டத்தின் நிர்வாகம் இழப்பீடு எதும் வழங்காமல் 14 நாட்களுக்குள் அத்தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கிருப்பத்தாக பரபரப்பான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. இதன் தொடர்பாக மாநில அரசாங்க கூட்டத்தில் சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்தையும் மக்களையும் அழைத்து முறையான சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைச் செய்திருப்பதாக வோங் சியா ஜென் கூறினார் .
இத்தோட்ட மக்கள் பரவலாக வெளியிடப்பட்ட செய்தியில் சுங்கை ஊலார் தோட்டம் பிரிவு 2 யில் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் தோட்ட நிர்வாகத்தின் கணக்கின் படி அத்தோட்டத்தில் 9 குடும்பங்கள் மட்டும் இருக்கின்றன. அத்துடன் அத்தோட்டத்தில் எவரும் வேலை செய்யவில்லை என்று தோட்டம் நிர்வாகம் குறிப்பிட்டிருப்பதாக வோங் தெரிவித்தார்.

மேலும், வோங் சியா ஜென் கூறுகையில் பிரிட்டிஷ் காலத்தில் மிகவும் பிரபலமான தோட்டங்களின் ஒன்றுத்தான் சுங்கை ஊலார் தோட்டம் பிரிவு 2 ஆகும். இதுவரை நாங்கு நிர்வாகங்கள் இத்தோட்டத்தை பராமரித்திருப்பதாக வோங் தெரிவித்தார். இப்பொழுது இத்தோட்டத்தில் மக்கள் யாரும் வேலைகள் செய்யவில்லை என்பதனை அனைவரும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அத்தோட்டத்தில் கோவில், தேவலாயம் மற்றும் சீனரின் கடையும் இருப்பதாக வோங் கூறினார்.

இன்று கூலிம் மாவட்ட அளவில் கொண்டாடப்பட்ட "ஹரி சூசி மலேசியா” நிகழ்வைத் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின் திசைகள் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு விளக்கினார். சுங்கை ஊலார் தோட்டம் பிரிவு 2 யின் பிரச்சனையை இரு தரப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகே, முறையான தீர்வுக் காண முடியும் என்று அவர் தெரிவித்தார்.