Oct 30, 2026
Thisaigal NewsYouTube

கோத்தா கெமுனிங்கில் தீபாவளி உதவித் திட்டம்: 750 பேருக்கு வாய்ப்பு அதிகரிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோத்தா கெமுனிங்கில் தீபாவளி உதவித் திட்டம்: 750 பேருக்கு வாய்ப்பு அதிகரிப்பு

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற ஜோம் ஷோப்பிங் உதவித் திட்டத்தின் மூலம் இவ்வாண்டு 750 பேர் பயனடைந்தனர்.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் இன்று நடைபெற்ற இத்திட்டத்தில், கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட 500 பேர் என்ற எண்ணிக்கையுடன் கூடுதலாக 250 பேர் சேர்க்கப்பட்டு, பயனாளிகளின் எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தீபாவளிக்கான பொருட்களை வாங்குவதற்கு வழங்கப்பட்ட இந்த உதவி, தேவையுள்ள குடும்பங்களின் பண்டிகை காலச் செலவுகளைக் குறைத்து, அவர்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஜோம் ஷோப்பிங் திட்டத்தைத் தவிர, உணவுப் பொருள் கூடைகள் வழங்குதல், சமூக நலச் சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்களும் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக, பெகாவிஸ் (PEKAWIS) திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் உதவி தேவைப்படும் மக்களைச் சென்றடையும் சமூகநல நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாண்டு செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மொத்தம் சுமார் 1,000 பேர் பயனடைவார்கள் என்று பிரகாஷ் சம்புநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
திசைகள் – கேகே மார்ட் இணைந்து இரண்டு கருணை இல்லங்களுக்கு தீபாவளி உதவிப் பொருட்கள் வழங்கின

திசைகள் – கேகே மார்ட் இணைந்து இரண்டு கருணை இல்லங்களுக்கு தீபாவளி உதவிப் பொருட்கள் வழங்கின

தீபாவளியை முன்னிட்டு திசைகள் அலுவலகத்திற்கு நல்லெண்ண வருகை புரிந்தார் துணை அமைச்சர் தியோ நீ சிங்

தீபாவளியை முன்னிட்டு திசைகள் அலுவலகத்திற்கு நல்லெண்ண வருகை புரிந்தார் துணை அமைச்சர் தியோ நீ சிங்

பிறை சட்டமன்றத் தொகுதியில் 1,200 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்

பிறை சட்டமன்றத் தொகுதியில் 1,200 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்

தீபாவளி திருநாளை முன்னிட்டு யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் அறவாரியம் மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி

தீபாவளி திருநாளை முன்னிட்டு யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் அறவாரியம் மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி

கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!