Oct 29, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளியை முன்னிட்டு திசைகள் அலுவலகத்திற்கு நல்லெண்ண வருகை புரிந்தார் துணை அமைச்சர் தியோ நீ சிங்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளியை முன்னிட்டு திசைகள் அலுவலகத்திற்கு நல்லெண்ண வருகை புரிந்தார் துணை அமைச்சர் தியோ நீ சிங்

தீபாவளி திருநாளை முன்னிட்டு, தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் இன்று பிற்பகலில் திசைகள் அலுவலகத்திற்கு நல்லெண்ண வருகை மேற்கொண்டார். இரண்டாவது முறையாக திசைகள் அலுவலகத்திற்கு வருகை புரிந்த அவரை, அவரது சிறப்பு அதிகாரி ரவீன் மற்றும் இதர அதிகாரிகளுடன் திசைகளின் நிர்வாக இயக்குநர் ஜி.கே. பசுபதி, ஆசிரியர் இ.எம். சாமி மற்றும் திசைகள் பணியாளர்கள் அன்புடன் வரவேற்றனர்.

துணை அமைச்சருக்குப் பூங்கொத்து வழங்கி வரவேற்ற ஜி.கே. பசுபதி, அவரைத் திசைகளின் பிரதான வரவேற்பு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து, துணை அமைச்சர் தம்முடன் கொண்டு வந்த மதிய உணவைத் திசைகள் பணியாளர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தார். பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியைப் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்த இந்தச் சந்திப்பு, அலுவலகத்தில் அன்பான சூழலை உருவாக்கியது.

இந்தச் சந்திப்பின்போது, அச்சு ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்களின் பங்களிப்பு, ஊடக நிறுவனங்களுக்கான 30 மில்லியன் ரிங்கிட் புத்தாக்க நிதி, சமூக ஊடகங்களில் பரவும் பொய்ச் செய்திகள் உள்ளிட்ட முக்கியமான ஊடகத்துறை விவகாரங்கள் குறித்து துணை அமைச்சர் விளக்கமளித்தார். இந்தப் புத்தாக்க நிதி தொடர்பான அறிவிப்பைத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், குறுகிய காலக்கட்டத்தில் திசைகள் அடைந்துள்ள வளர்ச்சி, அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, மாதாந்திரச் சஞ்சிகை வெளியீடு உள்ளிட்ட முன்னெடுப்புகள் குறித்தும் துணை அமைச்சர் தியோ நீ சிங் ஆர்வத்துடன் கேட்டறிந்து பெருமிதம் தெரிவித்தார். திசைகள் மேற்கொண்டு வரும் ஊடக முயற்சிகள் குறித்த கலந்துரையாடல், அதன் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.

திசைகள் முன்னெடுத்து வரும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நிர்வாக இயக்குநர் G.K. பசுபதியும் ஆசிரியர் இ.எம். சாமியும் துணை அமைச்சருக்கு விளக்கமளித்தனர். ஊடகத்துறையில் திசைகள் மேற்கொண்டு வரும் பணிகளுடன், சமூகத்தின் தேவைகளை அடையாளம் கண்டு முன்னெடுக்கும் முயற்சிகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

துணை அமைச்சரின் வருகையை முன்னிட்டு அவருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தீபாவளி திருநாளையொட்டி திசைகள் பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட அவர், தமது சார்பில் தீபாவளிப் பலகாரங்களையும் வழங்கினார். பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் இந்த அன்பான பரிமாற்றம், சந்திப்புக்கு மேலும் இனிமை சேர்த்தது.

துணை அமைச்சரின் நல்லெண்ண வருகைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திசைகளின் நிர்வாக இயக்குநர் G.K. பசுபதி அவருக்கு அன்பளிப்புப் பொட்டலத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

செய்தித்துறைக்கு அப்பாற்பட்ட நிலையில், திசைகள் முன்னெடுத்து வரும் சமூகநல நடவடிக்கைகள் குறித்தும் துணை அமைச்சர் Teo Nie Ching ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ஊடகப் பணிகளுடன் சமூகத்தின் மீதான அக்கறையையும் இணைத்து திசைகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம், திசைகள் தனது செய்திப் பணிகளுக்கு அப்பாற்பட்டும் சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்பையும் அதன் சமூகப் பொறுப்புணர்வையும் துணை அமைச்சருடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
பிறை சட்டமன்றத் தொகுதியில் 1,200 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்

பிறை சட்டமன்றத் தொகுதியில் 1,200 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்

தீபாவளி திருநாளை முன்னிட்டு யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் அறவாரியம் மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி

தீபாவளி திருநாளை முன்னிட்டு யாயாசான் கெபாஜிகான் அர்டிஸ் தானாஆயர் அறவாரியம் மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி

கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

கோத்தா கெமுனிங்கில் 6 இந்திய சிறு வியாபாரிகளுக்கு  வணிகச் சாதனங்கள் – 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உதவி

கோத்தா கெமுனிங்கில் 6 இந்திய சிறு வியாபாரிகளுக்கு வணிகச் சாதனங்கள் – 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உதவி