கோலாலம்பூர், ஜூலை.19-
நாட்டின் பொருளாதார இலக்கை வலுப்படுத்தும் முயற்சியில் கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமானத் தளமான தேசிய பொருளாதார மன்றம் (NEF) 2025 கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது. அதில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
பல்வேறு கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க முதலீடுகள் மூலம் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை (TVET) ஆக்ககரப்படுத்த கெசுமாவின் உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார். SKM நிலை 6–8 ஐ பட்டப்படிப்புக்கு சமமானதாக அங்கீகரிக்க சட்டம் 652 இல் திருத்தம் செய்வது முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களின் வேலை வாய்ப்பு, முதலாளிகளுக்கான ஊக்கத் தொகைகள் மற்றும் TVET பட்டதாரிகளுக்கு தெளிவான தொழில் பாதைகள் உள்ளிட்ட வேலை சந்தையின் உண்மையான தேவைகளுக்கு இணையாக திறன் பயிற்சியை வழங்க தொழில்துறையுடன் கேந்திர ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அனைவருக்கும் மிகவும் நியாயமான மற்றும் சமமான பொருளாதாரம் என்ற மடானியின் விருப்பங்களுக்கு இணங்க, ஒவ்வொரு தனிநபருக்கும் தரமான திறன் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதில் கெசுமா உறுதி பூண்டுள்ளதாக ஸ்டீவன் சிம் கூறினார்.

Related News

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்
