Nov 29, 2026
Thisaigal NewsYouTube

"இந்திய சமூகத்தின் வளர்ச்சி நமது ஒற்றுமையில் உள்ளது" - இமையம் தீபாவளி நிகழ்ச்சியில் துணையமைச்சர் யுனேஸ்வரன் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
"இந்திய சமூகத்தின் வளர்ச்சி நமது ஒற்றுமையில் உள்ளது" - இமையம் தீபாவளி நிகழ்ச்சியில் துணையமைச்சர் யுனேஸ்வரன் வலியுறுத்து

இந்திய சமூகத்தின் ஒற்றுமை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் ‘இமையம் தீபாவளி கலை இரவு 2026’ நிகழ்ச்சியானது நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

புத்ராஜெயாவில் இந்திய சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர்களின் பிரதான அமைப்பான இமயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒற்றுமைத்துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து கொண்டார்.

'நமது பாரம்பரியத்தின் சிறப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும் அழகிய மாலைப் பொழுது’ என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட்ட இந்நகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள், பாரம்பரிய உடையணிந்து வந்து ஒருவருக்கொருவர் தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய துணையமைச்சர் யுனேஸ்வரன், புத்ராஜெயாவில் பணியாற்றும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்களை ஒன்றிணைத்து ஒரு சங்கமான நிர்வகித்து வரும் இமையத்திற்கு தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அதேவேளையில் இமையம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட தனிப்பட்ட முறையில் 10 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்குவதாகவும் யுனேஸ்வரன் அறிவித்தார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய இமையம் தலைவர் டாக்டர் சதிஷ் குமார் கே. முத்துசாமி, இந்திய சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையுடன் செயல்படும் போது, நமது சமூகம் மென்மேலும் வளர்ந்து பயனடையும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நமது பாரம்பரியம் காக்கப்பட்டு, நம்மிடையே ஒற்றுமை மேலோங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன், சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
எஸ்பிஎம் மாணவர்களின் வெற்றி வேண்டி தாமான் ஸ்ரீ மூடா இடைநிலைப் பள்ளி சார்பில் சிறப்பு ஆன்மீக நிகழ்வு

எஸ்பிஎம் மாணவர்களின் வெற்றி வேண்டி தாமான் ஸ்ரீ மூடா இடைநிலைப் பள்ளி சார்பில் சிறப்பு ஆன்மீக நிகழ்வு

தீபாவளியை முன்னிட்டு பினாங்கில் ஜசெக மற்றும் பிறை சட்டமன்றத் தொகுதி சார்பில் திறந்த இல்ல உபசரிப்பு

தீபாவளியை முன்னிட்டு பினாங்கில் ஜசெக மற்றும் பிறை சட்டமன்றத் தொகுதி சார்பில் திறந்த இல்ல உபசரிப்பு

பத்துமலையில் முப்பெரும் விழா கோலாகலம்! தமிழர் வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் ‘கடாரம் கொண்டான்’

பத்துமலையில் முப்பெரும் விழா கோலாகலம்! தமிழர் வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் ‘கடாரம் கொண்டான்’

தேர்தல் பணிகளை வலுப்படுத்த மஇகா இளைஞர் பிரிவில் புதிய திட்டம் - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தகவல்

தேர்தல் பணிகளை வலுப்படுத்த மஇகா இளைஞர் பிரிவில் புதிய திட்டம் - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தகவல்

ஆட்டிசம் மாணவர்களின் திறனை வளர்க்கும் கிள்ளான் ரோட்டரி கிளப்: சுங்கை ஊடாங் தேசியப் பள்ளியில் நவீன வசதிகள்

ஆட்டிசம் மாணவர்களின் திறனை வளர்க்கும் கிள்ளான் ரோட்டரி கிளப்: சுங்கை ஊடாங் தேசியப் பள்ளியில் நவீன வசதிகள்

தீபாவளியை முன்னிட்டு லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இந்திய உணவு விருந்து

தீபாவளியை முன்னிட்டு லெ மெரிடியன் புத்ராஜெயாவில் இந்திய உணவு விருந்து