ஷா ஆலாம், செப்டம்பர்.14-
மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவை ஏற்பாட்டில், உலகச் சிந்தனையாளர் தந்தை பெரியாரின் 147-வது அகவை நன்னாள் விழா வரும் செப்டம்பர் 15, 2025 திங்கட்கிழமை அன்று, மாலை 3:00 மணிக்கு ஷா ஆலாம், செக்சன் 19-ல் அமைந்துள்ள பொது மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவினை முன்னாள் துணையமைச்சர் டான் ஶ்ரீ க.குமரன் தொடக்கி வைப்பார்.
இவ்விழாவிற்கு, மாண்புமிகு ச.கு.விவேகானந்தன் வரவேற்புரை ஆற்று, எழுத்தாண்மை ஏந்தல் பெரு. அ. தமிழ்மணி பேருரை ஆற்றுவார்.
கொள்கைக் கனல் கெ.வாசு – மானமிகு த. பரமசிவம் ஆகியோர் தன்மானப் பெருஞ்சுடர் விருதினைப் பெருகின்றனர்
மேலும், இவ்விழாவில் தலைமை உரை ஆற்றுகிறார் பேரவையின் தேசியத் துணைத் தலைவர் த. பரமசிவம். மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் சா பாரதி, மலேசிய மாந்தநேயத் திராவிடர்க் கழகத்தின் தலைவர் நாக. பஞ்சு, பேராக் பெரியார் பாதையின் நிறுவனர் மாண்புமிகு கே.கேசவன், ஆகியோர் இச்சிறப்புமிகு விழாவில் சிறப்புரை ஆற்ற உள்ளனர். பிரபல பாடகர் எம்.எஸ். பிரிட்டோ தனது இசையால் வருகையாளர்களை மகிழ்விக்கவுள்ளார்.








