பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.06-
எதிர்வரும் ஜனவரி 11 ஆம் தேதி ஞாயிறன்று காலை 9.30- மணியளவில் தமிழ்ப்பெருங்குடியின் பெருவிழாவான பொங்கலையும் திருவள்ளுவராண்டையும் மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கிறது.
கடந்த 20- ஆண்டுகளாக அதன் தலைவர் எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ.தமிழ்மணி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிகழ்வு, இவ்வாண்டும் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு, மாலை அணிவித்து பொங்கலையும், தமிழாண்டையும் வரவேற்கப்படவிருப்பதால் நிகழ்வில், இந்திய சமூகத்தின் மூத்தத் தலைவரும் முன்னாள் துணையமைச்சருமான டான் ஶ்ரீ க.குமரன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இயக்கத் தோழர்களுடன்- திராவிடப் பெருங்குடிகளும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று இயக்கத் தலைமைச் செயலாளர் சி.மு. விந்தைக்குமரன் பொது அழைப்பாக அனைவருக்கும் விடுத்துள்ளார். மேல் விபரங்களுக்கு : 017 466 1767 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








