சட்டவிதி 834 மூலம் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துதல்

பிகேபிஜே வோங் சியூ ஹூங்
நேர்மைப் பிரிவின் தலைவர்,
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு (MOSTI)
( எழுதியவர்: பிகேபிஜே வோங் சியூ ஹூங் - அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின்(MOSTI) நேர்மை பிரிவின் தலைவர்)
- 2025 அக்டோபர் 22, 23 ஆகிய தினங்களில் பிரான்ஸ், பாரிஸில் நடைபெற்ற 7 ஆவது விண்வெளி நிலைத்தன்மை மீதான உச்சநிலை மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை
முன்னுரை: புதிய விண்வெளி போட்டா போட்டியில் நேர்மை அரணை வலுப்படுத்துதல்
விண்வெளித் துறை ஒரு முக்கியமான புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு பரிமாணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதுமை மற்றும் தரவு வளத்திற்கான வாய்ப்புகளுக்குப் பின்னால், சிக்கலான அபாயங்கள் இதில் மறைக்கப்பட்டுள்ளன. சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், வியூகத் தகவல் கசிவுகள் மற்றும் அதிக மதிப்பு வாய்ந்த திட்டங்களை வாங்குவதில் சாத்தியமான கசிவு ஆகியவை இவற்றில் அடங்கும்.
2030 ஆம் ஆண்டு தேசிய விண்வெளிக் கொள்கை வாயிலாக போட்டா போட்டி மற்றும் நேர்மை அடிப்படையிலான விண்வெளி சுற்றுச்சூழல் முறையை மலேசியா தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
2025 ஆம் ஆண்டு அக்டோபரில் பிரான்ஸ், பாரிஸில் நடைபெற்ற 7 ஆவது விண்வெளி நிலைத்தன்மை மீதான உச்சநிலை மாநாட்டில் நம் வருகையானது, சமரசம் செய்து கொள்ள முடியாத “நேர்மை மற்றும் சிறந்த நிர்வாகம்” ஒரு முக்கிய அம்சத்தை வலியுறுத்துகிறது.
நாட்டின் விண்வெளி மேம்பாடு, வெளிப்படையாக, பொறுப்புணர்வுடன், எந்தவொரு தவறான நடத்தையிலிருந்தும் விடுபட்டுள்ளது என்பதை உறுதி செய்வதற்கு இத்தகைய மதிப்புகள் முதன்மை அரணாக விளங்குகின்றன. குறிப்பாக ஒரு நீண்ட காலத்திற்கு மலேசியாவின் விண்வெளியின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிச் செய்வதற்கு இவை அவசியமாகின்றன.
மலேசிய விண்வெளியின் பின்னணி மற்றும் கட்டமைப்பு
விண்வெளி துறையில் மலேசியாவின் பயணமானது 1988 ஆம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க வகையில் தொடங்கியது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை நோக்கங்களுக்காக தொலைதூர செயற்கைக்கோள் படத் தகவல்களைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து விண்வெளித் துறையில் மலேசியாவின் பயணம் ஆரம்பமானது.
1996 இல் மியாசாட் 1 (MEASAT-1) தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டதன் மூலம் இந்தத் திறன் மேலும் வலுப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2007 இல் நாட்டின் பரவெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணி, நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் ஓர் அடையாளமாக மாறியுள்ள ஒரு மகத்தானச் சாதனையாகும்.
விண்வெளித் துறையின் வளர்ச்சியானது தொடக்கத்தில் தேசிய தொலைதூர உணர்திறன் மையத்தை (MACRES) நிறுவியதன் வாயிலாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சினால் (MOSTI) முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் இது 2006 இல் மலேசிய தொலைதூர உணர்திறன் நிறுவனம் (ARSM) என்ற பெயரில் ஓர் இலாகாவாக மேம்படுத்தப்பட்டது. ARSM என்பது பல்வேறு தேசிய பயன்பாடுகளுக்கான பூமி கண்காணிப்பு தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தரவு செயலாக்கத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் விரிவடையும் கொள்கை தேவைகளுக்கு ஏற்ப விண்வெளி சேவைகளை உருவாக்குதல், அறிவியல் ஆராய்ச்சி நடத்துதல் மற்றும் நாட்டின் விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்காக “அங்காசா” எனப்படும் தேசிய விண்வெளி ஏஜென்சி (ANGKASA) நிறுவப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் 2030 தேசிய விண்வெளிக் கொள்கை உருவாக்கப்பட்ட பிறகு விண்வெளித் துறை நிர்வாகத்தின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்த அரசாங்கம் வியூக நடவடிக்கைகளை மேற்கொண்டது. மறுசீரமைப்பின் வாயிலாக ANGKASA – வுடன் ARSM இணைக்கப்பட்டு, மலேசிய விண்வெளி ஏஜென்சி (MYSA) உருவாக்கப்பட்டது.
மலேசியாவின் விண்வெளித் துறையின் வளர்ச்சி நிலையானதாகவும், போட்டித்தன்மையுடனும், பொறுப்புடனும் தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதிச் செய்வதற்காக அரசாங்கத்தின் அபிலாஷைகளுக்கு இணங்க, இந்த இணைப்பு MYSA என்ற பெயரில் நாட்டின் விண்வெளி மையத்தை வழிநடத்தும் ஒரே நிறுவனமாக உருவாக்கப்பட்டது.
ஏஜென்சி மற்றும் நிர்வாக அமலாக்கத்தின் பங்களிப்பு
நேர்மை மற்றும் மற்றும் மீள்தன்மை கொண்ட விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைப்பதில் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் இரண்டு முக்கிய நிறுவனங்கள் மூலம் MOSTI முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
A. மலேசிய விண்வெளி ஏஜென்சி (MYSA)
MYSA ஏஜென்சியானது, 2030 தேசிய விண்வெளிக் கொள்கையை இயற்றுவதற்கு பொறுப்பேற்றுள்ள மேம்பாடு மற்றும் புத்தாக்கத்திற்கான ஓர் அமைப்பாகும். இதன் பங்களிப்பானது, தொழில்நுட்பச் செயல்பாடுகளை நிர்வகித்தல், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் தேசிய திறனை வளர்ப்பது, பூமியை வரைபடமாக்குதல் மற்றும் அனைத்துலக வியூக ஒத்துழைப்பை வளர்ப்பது ஆகியவை அடங்கும்.
இந்தச் சூழலில், நேர்மை மற்றும் தொழில்முறை நிபுணத்துவமானது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர்&டி) ஒதுக்கீடுகளை நிர்வகிப்பதிலும், நாட்டின் திறன் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதிலும் முக்கிய அடிப்படையாக விளங்குகிறது.
B. விண்வெளி ஆணையப் பிரிவு (BPA) மற்றும் சட்டம் 834 (முறைப்படுத்துதல்)
மலேசிய விண்வெளி ஆணையச் சட்டம் 2022 [சட்டம் 834] பிரகடனப் படுத்தப்பட்டது மூலம் ஒரு வலுவான சட்ட அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மலேசிய விண்வெளி ஆணையம் மற்றும் விண்வெளி ஆணையப் பிரிவை (BPA) பிரதான முறைப்படுத்தப்பட்ட அமைப்புகளாக நிறுவியது. சட்டம் 834 இன் கீழ், BPA இதற்குப் பொறுப்பாகும்:
1. உரிமம் வழங்குதல் மற்றும் செயல்படுத்துதல் - செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் செயல்பாடுகள் உட்பட அரசு மற்றும் தனியார் துறையின் விண்வெளி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல்.
2. இணக்கம் மற்றும் பொறுப்பை உறுதிச் செய்தல் - ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) அனுசரணையின் கீழ் அனைத்துலக ஒப்பந்தங்கள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப பின்பற்றப்படுவதை உறுதிச் செய்தல். குறிப்பாக பொறுப்பேற்பது, விண்வெளிப் பொருட்களைப் பதிவு செய்வது மற்றும் விண்வெளி பயன்பாடு தொடர்பில் அமைதியான முறையில் பொறுப்பேற்பதாகும்.
3. பூமியிலோ அல்லது விண்வெளியிலோ விண்வெளி விபத்து விசாரணையை நிர்வகித்தல் - விண்வெளிப் பொருள்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சம்பவங்கள், அவை சுற்றுப்பாதையில் நிகழ்ந்தாலும் அல்லது வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து பூமியின் மேற்பரப்பை பாதித்தாலும், விசாரணைகளை நடத்துதல்.
சட்டம் 834 ஆல் ஆதரிக்கப்படும் BPA இன் பங்கு, நாட்டின் விண்வெளி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் நிர்வாகம் மற்றும் நேர்மை கொள்கைகளை நிலைநிறுத்துவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டிற்குச் சான்றாகும்.
தற்போதைய சிக்கல்கள் மற்றும் விண்வெளி நேர்மை இடர்கள்
விண்வெளித் துறை தற்போது மிக சிக்கலான உலகளாவிய சவால்களை எதிர்கொள்கிறது - சுற்றுப்பாதை நெரிசல் மற்றும் விண்வெளிக் குப்பைகள் முதல், புவிசார் அரசியல் போட்டி மற்றும் தனியார் நிறுவனங்களின் வணிகமயமாக்கல் வரை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நேர்மை மற்றும் நிர்வாகத்திற்குக் கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பிரச்சினைகளில் பின்வருவன அடங்கும்:
1. தரவு பாதுகாப்பு மற்றும் இறையாண்மை – நாட்டின் பாதுகாப்புடன் நெருக்கமான தொடர்புடைய செயற்கைக்கோள் புவிசார் தரவுகளை நிர்வகிப்பதாகும்.
எந்தவொரு தரவு கசிவும் நாட்டின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.
2. பொறுப்பு மற்றும் விண்வெளிக் குப்பைகள் - ராக்கெட் குப்பைகள் அல்லது விண்வெளிப் பொருட்கள் மலேசிய வான்வெளியில் நுழையும் அபாயத்திற்கு சட்டம் 834 இன் கீழ் தெளிவான நிர்வாக கட்டமைப்பு மற்றும் பொறுப்புகூறல் அவசியமாகிறது.
3. கொள்முதல் கசிவு - விண்வெளி தொழில்நுட்பத் திட்டங்கள் பெரிய நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கியது. பலவீனமான நிர்வாகம், செயற்கைக்கோள் திட்டங்களை வாங்குவதிலும், முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் மோதல்கள் மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும்.
MOSTI நேர்மை பிரிவின் முக்கிய பங்கு: நம்பிக்கையின் அரணை உருவாக்குதல்
அதிக ஆபத்துள்ள சூழலில், நேர்மை மற்றும் சிறந்த நிர்வாகத்திறன் ஆகியவை நம்பிக்கையைச் சூழ்ந்துள்ள முதன்மை கூறுகளாகும். MOSTI நேர்மைப் பிரிவு, நாட்டின் விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பு, வெளிப்படையாகவும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவதை உறுதிச் செய்கிறது. தவிர பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஆலோசனைகளை வழங்குவதில் முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது.
1. நேர்மை இடர் மேலாண்மை - MYSA மற்றும் வாரியத்தின் கீழ் உள்ள அனைத்து மதிப்பு வாய்ந்த திட்டங்களை, குறிப்பாக விண்வெளி தொழில்நுட்பத்தைக் கொள்முதல் செய்வதில் ஆக்ககரமான முறையில் நேர்மை இடர் மதிப்பீடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
2. ரகசியத்தன்மை மற்றும் தரவுகளைப் பாதுகாத்தல் - வியூக தகவல்களின் ரகசியத்தன்மையையும் நாட்டின் தரவுகளின் இறையாண்மையையும் பாதுகாக்க செயற்கைக்கோள் மற்றும் புவிசார் தரவுகளைக் கையாளும் அரசு ஊழியர்களிடையே நெறிமுறை மதிப்புகள், தொழில்முறை மற்றும் தேசப்பற்றை வலியுறுத்துதல்.
3. முறைப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை வலுப்படுத்துதல் - சட்டம் 834 இன் உரிமம் மற்றும் அமலாக்கம், வெளிப்படையாகவும், நியாயமாகவும், நலன் மோதல்களிலிருந்து விடுபடுவதை உறுதிச் செய்ய BPA மற்றும் சட்ட வாரியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுதல் - இதன் மூலம் தொழில் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தலாகும்.
உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் விண்வெளி நிலைத்தன்மை
வெளிப்புற விண்வெளியின் அமைதியான பயன்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு (UN COPUOS), சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (IAF), ஆசிய-பசிபிக் பிராந்திய விண்வெளி முகமை மன்றம் (APRSAF), அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) மற்றும் விண்வெளிக்கான உச்சநிலை மாநாடு நிலைத்தன்மை போன்ற அனைத்துலக தளங்களில் தீவிரமாகப் பங்கேற்பதன் மூலம் ஒருமைப்பாடு மற்றும் நிர்வாகத்திற்கான மலேசியாவின் அர்ப்பணிப்பு நிரூபிக்கப்படுகிறது.
இந்தப் பங்கேற்பு, விண்வெளிப் பாதுகாப்பு தரநிலைகள், பொறுப்பு மற்றும் நிலைத்தன்மை மேலாண்மை ஆகியவற்றில் மலேசியா தனது கருத்துக்களைக் கூறவும், உணர்திறன் வாய்ந்த தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதில் அனைத்துலக நம்பிக்கையை வலுப்படுத்தவும் அனுமதிக்கிறது.
தேசிய அளவில் வெளிப்படையான மற்றும் நேர்மை சார்ந்த நிர்வாகத்தின் மூலம் மட்டுமே இந்த உலகளாவிய நம்பிக்கையை வளர்க்க முடியும்.
முடிவு
மலேசிய விண்வெளித் துறை தற்போது ஆற்றலும், சவாலும் நிறைந்த கட்டத்தில் நுழைகிறது. 2030 ஆம் ஆண்டு தேசிய விண்வெளிக் கொள்கையின் நிலைத்தன்மை மற்றும் வெற்றியை உறுதிச் செய்ய, ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் நேர்மையை அடிப்படையாகக் கொண்ட பணித்தன்மையிலான கலாச்சாரம் கட்டமைக்கப்பட வேண்டும்.
நேர்மை மற்றும் சிறந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு முடிவும் மக்களுக்கு பயன் அளிப்பதை உறுதிச் செய்யும். ஒவ்வொரு கொள்முதலும் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே நேர்மையின் பிரதானத் தூணாகும்.

2025 அக்டோபர் 22 முதல் 23 வரை பிரான்ஸ், பாரிஸில் நடைபெற்ற 7 ஆவது விண்வெளி நிலைத்தன்மை மீதான உச்சநிலைமாநாடு
ஆர்த்தி ஹோல்லா மாய்னி
இயக்குநர், ஐ.நா.விவின் விண்வெளி விவகாரங்கள் பிரிவு (UNOOSA)








