கோலாலம்பூர், அக்டோபர்.02-
'முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள்’ நூல் வெளியீட்டு விழா, வரும் அக்டோபர் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய வளாக செட்டியார் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில், கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறும். முருகு அவர்களுடனான அனுபவங்கள் குறித்து டான்ஶ்ரீ க.குமரன், கவிஞர் முரசு நெடுமாறன், எழுத்தாளர் பெரு.அ.தமிழ்மணி ஆகியோர் பகிர்ந்து கொள்வர்.
இந்த இலவச நிகழ்ச்சிக்குத் தமிழன்பர்களும், இலக்கிய ஆர்வலர்களும் வருகை தந்து முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் அவர்களின் நூற்றாண்டு நினைவலைகள் நூலை இலவசமாகப் பெறவும், இலக்கியத்தை இரசிக்கவும் திரண்டு வரும்படி கண்ணதாசன் அறவாரியம் அழைப்பு விடுத்துள்ளது.