Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இரு புதிய வழித் தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது பாதிக் ஏர்
சிறப்பு செய்திகள்

இரு புதிய வழித் தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது பாதிக் ஏர்

Share:

சுபாங் ஜெயா, ஜூலை.29-

பாதிக் ஏர் விமான நிறுவனம், சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து இரண்டு புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று பாங்காக்கிற்கான விமானச் சேவை. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவ்வழித் தடம் அவ்விமான நிறுவனத்தின் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லைக் குறிக்கிறது. மற்றொன்று கூச்சிங்காங்கும். அது உள்நாட்டு வழித்தடம்.


இந்த கேந்திர விரிவாக்கம் பிராந்திய மற்றும் உள்நாட்டு இணைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் அதற்கு அப்பால் ஒரு முக்கியப் பயண மையமாக சுபாங் விமான நிலையத்தின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.


2025 சிலாங்கூருக்கு வருகை புரியும் ஆண்டையொட்டி, டூரிஸம் சிலாங்கூர் இந்த முயற்சியை வரவேற்கிறது. குறிப்பாக தாய்லாந்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை பெரிதும் எதிர்பார்க்கிறது.

Related News