Dec 1, 2025
Thisaigal NewsYouTube
மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவி: இன்ப அதிர்ச்சியாகும்
சிறப்பு செய்திகள்

மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவி: இன்ப அதிர்ச்சியாகும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

நாடு முழுவதும் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை 100 ரிங்கிட் சாரா நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருப்பது இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்படும் என்று 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் அறிவித்து இருப்பது, சற்றும் எதிர்பார்க்காததாகும். காரணம், இந்த விவகாரம், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

எனினும் நாட்டில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அனுகூலத்தைத் தர வல்ல 100 ரிங்கிட் சாரா நிதி உதவி மீண்டும் வழங்குவதற்கு பிரதமர் முன்வந்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News