ஈப்போ, அக்டோபர்.11-
பேரா, சுங்கை சட்டமன்ற உறுப்பினரும், பேரா மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை மற்றும் இந்திய நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, இன்று அக்டோபர் 11 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பீடோர், டேவான் முஹிபா மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு, சுங்கை, பீடோர், தாப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிலப்பட்டா வழங்குதல், பள்ளிகள், ஆலயங்கள், பொது அமைப்புகளுக்கு மானியம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அதே வேளையில், பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவர் படைப்புகள் என பலதரப்பட்ட நிகழ்வுகளுடன் மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கத்தின் தீபாவளி பொது திறந்த இல்ல உபசரிப்பு, வண்ணக் கலவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விருந்து நிகழ்ச்சியில், பொதுமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம்.