Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மதுபானம், சிகரெட் வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுகிறது
சிறப்பு செய்திகள்

மதுபானம், சிகரெட் வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.10-

மதுபானம் மற்றும் சிகரெட் வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிச் செய்வதற்கு இவ்வரி உயர்த்தப்படவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

சிகரெட் மீதான கலால் வரி ஒரு சிகரெட் துண்டுக்கு 2 காசு வீதமும், சுருட்டு வகைகளுக்கு கிலோவிற்கு 40 ரிங்கிட்டும் அதிகரிக்கப்படவிருக்கிறது.

மதுபான வகைகளுக்கு கலால் வரி 10 விழுக்காடு உயர்த்தப்படவிருக்கிறது. வரும் நவம்பர் முதல் தேதியிலிருந்து வரி அதிகரிப்பு அமலுக்கு வருகிறது.

Related News