கோலாலம்பூர், அக்டோபர்.10-
சும்பாங்கான் தூனாய் ரஹ்மா எனப்படும் எஸ்டிஆர் உதவித் தொகை, தீபாவளித் திருநாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
எஸ்டிஆர் மற்றும் சாரா ஆகிய உதவித் தொகைகளுக்காக அரசாங்கம் 13 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது. கிட்டத்தட்ட 9 மில்லியன் பெறுநர்கள் இந்த அனுகூலத்தைப் பெறவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.








