கோலாலம்பூர், அக்டோபர்.10-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 47 ஆயிரம் கோடி ரிங்கிட் அல்லது 470 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பட்ஜெட்டாகும்.
இது கடந்த 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 42 ஆயிரத்த 100 கோடி ரிங்கிட் அல்லது 421 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பட்ஜெட்டை நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் அறிவித்திருந்தார்.








