Oct 19, 2025
Thisaigal NewsYouTube
2025 மலேசிய சுற்றுலாத் துறை விருதுகள்
சிறப்பு செய்திகள்

2025 மலேசிய சுற்றுலாத் துறை விருதுகள்

Share:

சன்வே, ஜூலை.24-

மலேசியாவின் பயண மற்றும் விருந்தோம்பல் துறையின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் 2025 சுற்றுலாத் துறை விருதளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அடுத்த மாதம் 9 ஆம் தேதி சிலாங்கூரில் சன்வே ரிசார்ட் ஹோட்டல் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வு, சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்குதல், புதுமை மற்றும் மீள்தன்மையை வெளிப்படுத்திய தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுற்றுலா சிலாங்கூர் மற்றும் சாந்தாய் டிராவல் ஆகியவற்றுடன் இணைந்து மலேசிய அனைத்துலக சுற்றுலா மேம்பாட்டு சங்கம் (MITDA) ஏற்பாடு செய்துள்ள2025 சுற்றுலாத் துறை விருதுகள், சிறந்த இலக்கு, நிலையான சுற்றுலா முயற்சிகள், சிறந்த ஹோட்டல் & தங்குமிடம், ஆண்டின் சிறந்த சுற்றுலா நடத்துனர்கள், சுற்றுலாவில் புதுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முக்கியமானவர்களை அங்கீகரிக்கும். 2025 சிலாங்கூருக்கு வருகை புரியும் ஆண்டுடன் இணைந்து, இந்த விருதுகள் மலேசியாவின் சுற்றுலாத் துறையில் தரம் மற்றும் சேவைக்கான ஒரு அளவுகோலாகச் செயல்படுகின்றன. இது உலகத் தரம் வாய்ந்த பயணத் தலமாக நாட்டின் நற்பெயரை வலுப்படுத்துகிறது.

இந்த விருதுகள் பாராட்டுகளுக்கு மேலானவை. அவை மலேசியாவை பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஒரு முதன்மையான சுற்றுலாத் தலமாக உயர்த்துவதற்கான எங்கள் கூட்டு முயற்சிகளின் கொண்டாட்டமாகும். எப்போதும் வளர்ந்து வரும் இத்துறையில் படைப்பாற்றல், நிலைத்தன்மை மற்றும் மீள்தன்மையை வெளிப்படுத்துபவர்களை நாங்கள் மதிக்கிறோம் என MITDA தலைவர் கேப்டன் மஹத்ஸிர் டான் ஶ்ரீ மன்சோர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 20 சிறப்பு விருது பிரிவுகளை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது என்று சுற்றுலா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் கூறினார்.

சுற்றுலாத் துறை மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வேலை வாய்ப்பு மற்றும் தேசிய வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

Related News

கேமரன்மலை,  தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

கேமரன்மலை, தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினரின் தீபாவளி அன்பளிப்பு

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

ஆதரவற்றச் சிறுவர்களின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றிய பாங் சாக் தாவ்!

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

“தூண்டில் மட்டும் அல்ல, வேகப் படகும்தான்” ஸ்டீவன் சிம்: MISI முயற்சியின் இலக்கு — திறமையான இந்திய சமூகத்தை உருவாக்குவது

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!