கோலாலம்பூர், அக்டோபர்.10-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 50 மில்லின் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். சபா, சரவாக் உட்பட முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதியானது, மலேசியாவில் மத சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்கும், பல்வேறு சமூகங்களின் மத நம்பிக்கைகளை மதிக்கும் வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, மலேசியாவில் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பை உறுதிச் செய்வதாகும். இது சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தக்கூடியதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.