ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.01-
நாட்டின் 68 ஆவது சுதந்திர தின விழாவை பினாங்கு இந்து அறப்பணி வாரியம், நேற்று கோலாகலமாகக் கொண்டாடியது. வாரியத்தின் தலைவர் ஆர்எஸ்என் ராயர் தலைமையில் ஒரே வண்ணமயமாக நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் 186 பேர் கலந்து கொண்டு நிகழ்விற்குப் பெருமை சேர்த்தனர்.

பங்கேற்றவர்கள் அனைவரும் இந்தியர்களின் பாரம்பரிய உடுப்பில் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தது. மலேசியர்களின் ஒற்றுமையுணர்வு சின்னமாக தேசியக் கொடி விளங்குகிறது என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த நாட்டின் மேன்மைக்கும் பொருளாதார உயர்விற்கும் இந்தச் சமூகம் முதுகெலும்பாக விளங்கியதை டாக்டர் லிங்கேஸ்வரன் நினைவு கூர்ந்தார்.
